Gen Z போராட்டம்! ஒரே இரவில் திவாலான நேபாளத்தின் ஹோட்டல் துறை..! சேதத்தின் மதிப்பு இத்தனை பில்லியனா?

nepal hotels

சுற்றுலா சார்ந்த பொருளாதாரத்தின் முக்கிய வருவாய் ஈட்டித் தரும் நேபாளத்தின் ஹோட்டல் துறை பேரிழப்பை சந்தித்துள்ளது.. நாடு முழுவதும் கிட்டத்தட்ட 20க்கும் மேற்பட்ட ஹோட்டல்கள் சமீபத்தில் மாணவர்கள் தலைமையிலான அரசாங்க எதிர்ப்பு போராட்டங்களின் போது சூறையாடப்பட்டு அல்லது தீக்கிரையாக்கப்பட்டு அழிக்கப்பட்டது.. இதனால் நேபாளத்தின் ஹோட்டல் துறை, ரூ.25 பில்லியனுக்கும் அதிகமான இழப்பை சந்தித்துள்ளதாக வெள்ளிக்கிழமை ஊடக அறிக்கை ஒன்று தெரிவித்துள்ளது.


காத்மாண்டுவில் உள்ள ஹில்டன் ஹோட்டல் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது.. இந்த ஹோட்டல் மட்டும் ரூ.8 பில்லியனுக்கும் அதிகமான சேதத்தை சந்தித்துள்ளதாக ஹோட்டல் அசோசியேஷன் நேபாளம் (HAN) வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது..

காத்மாண்டு பள்ளத்தாக்கு, போகாரா, புட்வால், பைரஹாவா, ஜாபா, பிரத்நகர், தங்கதி, மஹோட்டாரி மற்றும் டாங்-துல்சிபூர் ஆகிய இடங்களில் உள்ள பிற முன்னணி உள்நாட்டு மற்றும் சர்வதேச பிராண்ட் ஹோட்டல்களும் வன்முறையால் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.. பாதிக்கப்பட்ட பல ஹோட்டல்கள் பழுதுபார்ப்பு மற்றும் புனரமைப்பு இல்லாமல் மீண்டும் செயல்பட முடியாது, இது 2,000 க்கும் மேற்பட்ட தொழிலாளர்களின் வேலையை பாதிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது..

இதனால் வங்கிகள் மற்றும் பிற நிறுவனங்களுக்கான நிதிக் கடமைகளை நிறைவேற்றுவதில் ஹோட்டல்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தும் என்று சங்கம் கவலை தெரிவித்துள்ளது. சம்பவங்களை விசாரிக்கவும், குற்றவாளிகளை நீதியின் முன் நிறுத்தவும், பாதிக்கப்பட்ட வணிகங்களுக்கு இழப்பீடு அறிவிக்கவும் ஒரு நீதித்துறை குழு அமைக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது..

பழுதுபார்ப்பு மற்றும் மறுகட்டமைப்பை ஆதரிக்க ஒரு பொருளாதார நிவாரணப் தொகுப்பை வெளியிடவும் அரசாங்கத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளது.. முதலீட்டாளர்களின் நம்பிக்கையை மீட்டெடுப்பது சுற்றுலா மேம்பாட்டிற்கும் நாட்டின் பொருளாதார ஸ்திரத்தன்மைக்கும் இன்றியமையாதது என்பதை வலியுறுத்தியது.

நேபாளத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுற்றுலாத்துறை கிட்டத்தட்ட 7 சதவீதத்தைக் கொண்டுள்ளது மற்றும் அந்நிய செலாவணியின் முக்கிய ஆதாரமாகும். இமயமலை நாட்டில் விருந்தோம்பல் துறை கோவிட் பெருந்தொற்றால் ஏற்பட்ட முடக்கத்தில் இருந்து மீண்டு வருகிறது.

Read More : மீண்டும் ரஷ்யாவை உலுக்கிய பயங்கர நிலநடுக்கம்.. சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டதால் பீதியில் மக்கள்!

RUPA

Next Post

திணறிய திருச்சி..! விஜய்யை பார்க்க காத்திருந்த பெண்கள் மயக்கம்..! கடும் போக்குவரத்து பாதிப்பு!

Sat Sep 13 , 2025
2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தவெக தலைவர் விஜய் இன்று திருச்சியில் மக்களை சந்திக்கும் தனது சுற்றுப்பயணத்தை தொடங்குகிறார்.. இதற்காக சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் திருச்சி விமானம் சென்றடைந்தார்.. திருச்சி விமான நிலையத்தில் விஜய்க்கு தவெக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.. விஜய்யின் பிரச்சார வாகனம் முன்பு கூடிய தொண்டர்கள் பூக்களை தூவி, மேள தாளங்களுடன் வரவேற்பு அளித்தனர்.. அப்போது அங்கு ஏராளானோர் அங்கு கூடியிருந்ததால் சில […]
vijay trichy

You May Like