இந்தியா, சீனா, ரஷ்யா, மலேசியா, ஜப்பான், இந்தோனேஷியா மற்றும் தாய்லாந்து நாடுகளுக்கான இலவச விசாக்களை மார்ச் 31ஆம் தேதி வரை நடைமுறைப்படுத்துவதற்கு இலங்கை அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக இலங்கையின் வெளியுறவுத்துறை அமைச்சர் அலி சப்ரி ட்வீட் செய்துள்ளார்.
முன்னதாக மார்ச் மாதம், இலங்கை வெளியுறவு அமைச்சர் அலி சப்ரி, இந்தியாவுடனான தனது நாட்டின் உறவு ‘எங்கள் வெளியுறவுக் கொள்கையில் மிக முக்கியமான ஒன்றாகும்’ என்று தெரிவித்திருந்தார். பொருளாதார மீட்சியை அதிகரிக்க டெல்லியுடன் மிகவும் நெருக்கமாக பணியாற்றுவதற்கான தனது அரசாங்கத்தின் திட்டங்களையும் அவர் எடுத்துரைத்தார்.
“நாங்கள் ஒருங்கிணைத்து, இலங்கையில் இந்திய நாணயத்தை வர்த்தகம் செய்யக்கூடிய நாணயமாக அனுமதிக்க விரும்புகிறோம். நீங்கள் சிங்கப்பூருடன் [இதேபோன்ற ஒன்றை] செய்தீர்கள், நாங்கள் அதைச் செய்ய விரும்புகிறோம். 300 மில்லியன் முதல் 400 மில்லியன் இந்தியர்கள் சுற்றிப் பயணிப்பதன் மூலம் இந்தியாவின் திறனை நாங்கள் புரிந்துகொள்கிறோம். எனவே மூலையைச் சுற்றி, உங்கள் சொந்த நாணயத்தைப் பயன்படுத்த வாருங்கள்”என்று அவர் கூறியுள்ளார்.