9 வயதில் அரியணை.. 10 மனைவிகள்.. 350 துணைவிகளுடன் வாழ்ந்த இந்திய மன்னர்..!! யார் தெரியுமா..?

Maharaja Bhupinder Singh. 2

இந்தியாவை ஆண்ட மன்னர்கள் வீரத்தாலும், மக்கள் மீதான அக்கறையாலும், போர்த்திறனாலும் புகழ்பெற்றவர்களாக இருந்தனர். அவர்களின் சொகுசான மாளிகைகள், ஆடம்பர வாழ்க்கை பலரை ஆச்சரியப்படுத்தும். அந்த மன்னர்களில் ஒருவர் பாட்டியாலா மகாராஜா பூபிந்தர் சிங்.


புல்கியன் வம்சத்தைச் சேர்ந்த இவர், 1891-ஆம் ஆண்டு தனது ஒன்பது வயதில் மன்னர் ஆனார். சிறு வயதிலிருந்தே அரசாங்கம் மற்றும் மக்களின் நலனில் ஈடுபட்ட இவர், தனது ஆட்சியை திறமையாக நடத்தி வருகை பெற்றார். அவர் தனது வாழ்நாளில் 10 மனைவிகளை திருமணம் செய்துள்ளார். மேலும், 350 பெண்களை துணைவியாகக் கொண்டிருந்தார். அவர்களிடமிருந்து 88 குழந்தைகளையும் பெற்றார். அதிலும் ராஜமாதா விமலா கவுர் அவருக்கு மிகவும் பிடித்தவராக இருந்தார். அடிக்கடி அவருடன் வெளிநாட்டிற்குச் சென்று சுற்றுப்பயணம் செய்தார்.

பூபிந்தர் சிங் தனது துணைவியர்கள் எப்போதும் அழகாகவும், பராமரிக்கப்பட்டவர்களாகவும் இருக்க நிபுணர்களை வேலைக்கு அமர்த்தியவர். பிரான்ஸிலிருந்து பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை நிபுணர்களை அழைத்து, அவர்களின் தோற்றத்தை விருப்பப்படி மாற்றியுள்ளார். இந்தியாவில் விமானத்தை சொந்தமாக வைத்திருந்த முதல் நபர் மகாராஜா பூபிந்தர் சிங் தான். 1910ம் ஆண்டு தான் வாங்கிய விமானத்திற்காக தனியாக விமான ஓடுதளம் ஒன்றை கட்டமைத்தார். 44 ரோல்ஸ் ராய்ஸ் கார்களும் வைத்திருந்தார். சொகுசு மாளிகைகள் மற்றும் ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்தார்.

பாட்டியாலா நெக்லஸ்: உலகம் அறிந்த பாட்டியாலா நெக்லஸ், மகாராஜா பூபிந்தர் சிங்க்கு சொந்தமானது. Cartier எனும் பிரபல நகை நிறுவனத்தால் வடிவமைக்கப்பட்ட இந்த நெக்லஸ், 5 சங்கிலி அடுக்கு கொண்டது. அதில் மொத்தம் 2,930 வைரக் கற்கள் பதிக்கப்பட்டிருந்தன. முக்கியமாக, அந்த காலத்திற்கேற்ப உலகின் 7வது பெரிய வைரம், ‘De Beers’ எனப்படும் வைரக்கல், நெக்லஸின் மையப்பகுதியில் அமைக்கப்பட்டிருந்தது. இதன் அளவு 428 கேரட் பியூர் கட் எனும் உயர்ந்த தரத்தை பெற்றது.

Maharaja Bhupinder Singh 1

இதற்கிடையே, நெக்லஸில் மேலும் 7 பெரிய வைரக்கற்கள் மற்றும் மாணிக்கங்கள் அமைக்கப்பட்டிருந்தன. இந்த உயர்ந்த வாழ்க்கைச் செல்வத்திலும், மகாராஜா பூபிந்தர் சிங் தனது 46வது வயதிலேயே இயற்கை மரணத்தை சந்தித்தார். அவரது வாழ்க்கை மற்றும் பாட்டியாலா நெக்லஸ், இந்திய மன்னர்களின் பிரம்மாண்டம் மற்றும் ஆடம்பர வாழ்க்கையின் சின்னமாக இன்றும் உலகிற்கு புகழ்பெற்றவை.

Read more: 15 நிமிடங்கள் ஸ்கிப்பிங் செய்தால் உடலுக்கு இத்தனை நன்மைகள் கிடைக்குமா..? – கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க..

English Summary

The Indian king who ascended the throne at the age of 9.. had 10 wives.. and lived with 350 concubines..!! Do you know who he is..?

Next Post

SBI வங்கியில் வேலை.. லட்சத்தில் சம்பளம்.. டிகிரி முடித்தவர்களுக்கு செம வாய்ப்பு..!! மிஸ் பண்ணிடாதீங்க..

Sun Sep 14 , 2025
State Bank of India has announced 122 vacancies.
bank job 1

You May Like