காவல்துறையின் விதிமுறைகளை மீறிய விஜய்..? தவெக நிர்வாகிகள் மீது பாய்ந்தது வழக்கு..!!

TVK Vijay 2025

தமிழக அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம், 2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தனது அரசியல் பயணத்தை தொடங்கியுள்ளது. மதுரை மாநாட்டை தொடர்ந்து, தனது முதல் கட்ட மக்கள் சந்திப்பு பயணத்தை தவெக தலைவர் விஜய், செப்டம்பர் 13ஆம் தேதி திருச்சியில் தொடங்கினார்.


இந்தக் கூட்டத்திற்கு காவல்துறை பல்வேறு நிபந்தனைகளை விதித்திருந்தது. ஆனால், ஆயிரக்கணக்கான தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் திரண்டதால், அந்த நிபந்தனைகள் முறையாக பின்பற்றப்படவில்லை. இதன் விளைவாக, விதிகளை மீறியதாக, தவெக-வின் 7 நிர்வாகிகள் மீது திருச்சி காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.

விஜய் பயணத்தின்போது, கட்டுக்கடங்காமல் கூட்டம் திரண்டதால், பயணத்தில் தாமதம் ஏற்பட்டது. தவெக தொண்டர்கள் காவல்துறையின் நிபந்தனைகளை மீறியதுடன், சில இடங்களில் தனியார் மற்றும் அரசு சொத்துகளையும் சேதப்படுத்தியதாக கூறப்படுகிறது. இதனால், திருச்சி மாவட்டத் தலைவர் கரிகாலன், மகளிர் அணி மாவட்டத் தலைவி துளசி மணி மற்றும் வழக்கறிஞர் பிரிவு நிர்வாகிகள் ஆதித்ய சோழன், இமயத் தமிழன், விக்னேஷ் குமார் ஆகியோர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இருப்பினும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் அல்லது பொதுச்செயலாளர் ஆனந்த் ஆகியோர் மீது எந்த வழக்கும் பதிவு செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Read More : வாட்ஸ் அப்பில் வந்த அசத்தலான அப்டேட்..!! AI செய்யும் மாயாஜாலம்..!! இனி வீடியோ காலை இப்படியும் மாற்றலாம்..!!

CHELLA

Next Post

ஒல்லியா இருக்கீங்கன்னு கவலப்படுறீங்களா?. இன்றிலிருந்து இவற்றை சாப்பிடத் தொடங்குங்கள்!.

Mon Sep 15 , 2025
உங்கள் உடல் மிகவும் மெலிந்து, ஆரோக்கியமான முறையில் எடை அதிகரிக்க விரும்பினால், நீங்கள் சரியான உணவு மற்றும் ஊட்டச்சத்தை கவனித்துக் கொள்ள வேண்டும். சந்தையில் கிடைக்கும் சப்ளிமெண்ட்ஸ் மற்றும் துரித உணவுகள் எடையை அதிகரிக்கலாம், ஆனால் நீண்ட காலத்திற்கு அது ஆரோக்கியத்திற்கும் தீங்கு விளைவிக்கும். எனவே, இதுபோன்ற சில ஆரோக்கியமான உணவுகளை உணவில் சேர்ப்பதன் மூலம், நீங்கள் இயற்கையான மற்றும் பாதுகாப்பான முறையில் எடை அதிகரிக்கலாம். பால் மற்றும் வாழைப்பழம்: […]
weight gain foods

You May Like