GOLD RATE: தொடர் உயர்வுக்கு பிறகு மீண்டும் குறைந்த தங்கம் விலை.. இன்றைய விலை நிலவரம் என்ன..?

360 F 613229837 ohXkiDGLI6YYcm1310lsyik3sralKlQN

உலக பொருளாதாரத்தில் நிலவும் ஏற்ற இறக்கங்களை பொறுத்து தங்கம் விலை ஒவ்வொரு நாளும் நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உள்ளிட்ட பல காரணிகள் தங்கம் விலை உயர்வில் முக்கிய பங்கு வகிக்கின்றன.


ரஷ்யா – உக்ரைன் மோதல், மத்திய கிழக்கில் நிலவும் பதற்றம், ட்ரம்பின் சில அதிரடி நடவடிக்கைகள் உள்ளிட்ட பல காரணங்களால் சர்வதேச அளவில் பொருளாதார ஸ்திரத்தனமை இல்லை.. இதனால் முதலீட்டாளர்கள் பாதுகாப்பு கருதி பலரும் தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர். எனவே தங்கம் என்பது தற்போது சாமானிய மக்களுக்கு எட்டாக் கனியாக மாறி உள்ளது.

கிட்டத்தட்ட 15 நாட்களாகவே தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வந்தது.. அதன்படி கடந்த சனிக்கிழமை வரலாறு காணாத புதிய உச்சமாக தங்கம் விலை ஒரு கிராமுக்கு ரூ.10,000-ஐ கடந்து, சவரனுக்கு ரூ.81,000ஐ தாண்டியது. இதனால் நகைப்பிரியர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.

இந்த நிலையில், சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு ரூ. 10 குறைந்து ரூ. 10,210-க்கும் சவரனுக்கு ரூ. 80 குறைந்து ரூ. 81,680-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலையில் மாற்றம் இல்லாமல் கிராம் ரூ.143-க்கும், ஒரு கிலோ ரூ.1.43 லட்சத்துக்கும் விற்பனையாகிறது. தொடர்ந்து உயர்ந்து வந்த தங்கம் விலை இன்று சற்று குறைந்துள்ளதால் நகைப்பிரியர்கள் நிம்மதி அடைந்துள்ளனர்..

Read more: மின்சார ஸ்கூட்டர் வாங்க ரூ.20,000 மானியம்..!! யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்..!! தமிழ்நாடு அரசின் சூப்பர் அறிவிப்பு..!

English Summary

GOLD RATE: Gold price slightly lower after continuous rise.. What is the price situation today..?

Next Post

இன்னும் மவுசு குறையல..!! வசூலில் பட்டையை கிளப்பும் கேப்டன் பிரபாகரன்..!! அதிர்ச்சியில் மதராஸி படக்குழு..!!

Mon Sep 15 , 2025
மறைந்த நடிகர் விஜயகாந்தின் 100-வது திரைப்படம் ‘கேப்டன் பிரபாகரன்’. இந்தப் படம் 1991ஆம் ஆண்டில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றது. ஆர்.கே.செல்வமணி இயக்கத்தில் வெளியான இந்த திரைப்படம், விஜயகாந்தின் சினிமா வாழ்வில் ஒரு மைல்கல்லாக அமைந்தது. ரஜினிகாந்த், கமல்ஹாசன், பிரபு போன்ற முன்னணி நடிகர்களின் 100-வது திரைப்படங்கள் பெரிய வெற்றி பெறாத நிலையில், விஜயகாந்தின் கேப்டன் பிரபாகரன் படம் வசூலை வாரிக் குவித்தது. மேலும், இந்தப் படத்தில்தான் மன்சூர் அலிகான் […]
Vijayakanth 2025

You May Like