பிரபல சமையல் கலைஞரும், நடிகருமான மாதம்பட்டி ரங்கராஜ் மற்றும் ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிஸில்டா ஆகியோரின் உறவு தொடர்பான சர்ச்சை கடந்த சில நாட்களாக சமூக வலைதளத்தில் பரபரப்பை கிளப்பி வருகின்றன. அந்த வகையில், சமீபத்தில் பரவி வரும் சில புகைப்படங்கள் புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளன.
தற்போது வைரலாகி வரும் புகைப்படத்தில் மாதம்பட்டியும், ஜாய் கிரிஸில்டாவும் லிஃப்டில் நெருக்கமாக இருக்கும் காட்சி இடம்பெற்றுள்ளது. ஆரம்பத்தில், ரங்கராஜ் திருமணமானவர் என்பதை அறிந்தும் ஜாய், அவரது புகழுக்காகவும் பணத்திற்காகவும் திருமணம் செய்து கொண்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.
ஆனால், ஜாய் தனது தரப்பு நியாயங்களை சமூக வலைத்தளங்களில் விளக்க தொடங்கிய பிறகு, பொதுமக்களின் கருத்து மாற தொடங்கியது. ரங்கராஜ் தனது முதல் மனைவியை முறைப்படி விவாகரத்து செய்யாமல், ஜாயுடன் 2 ஆண்டுகள் உறவில் இருந்ததாகவும், அவர்களுக்கு ஒரு குழந்தை பிறந்ததும் தன்னை மாதம்பட்டி தவிர்ப்பதாகவும், ஜாய் குற்றம்சாட்டியுள்ளார்.
ஜாய், தனது முதல் திருமண முறிவுக்கு பிறகு ரங்கராஜுடன் பழகியதாகவும், அவர் தன்னை கர்ப்பமாக்கிவிட்டு திருமணம் செய்ய மறுத்ததாகவும் புகார் அளித்துள்ளார். தற்போது 7 மாத கர்ப்பிணியாக உள்ள ஜாய், காவல் ஆணையரகத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை என்று கூறி முதலமைச்சர் மு.க. ஸ்டாலினிடம் நீதி கோரியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.



