டெல்லியில் நடைபெற்ற நவராத்திரி கொண்டாட்டங்களில் பிரதமர் மோடி, சோனியா காந்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர். டெல்லி ராம்லீலா மைதானத்தில் நடந்த தசரா கொண்டாட்டங்களில் பிரதமர் மோடி கலந்துகொண்டு சிறப்பித்தார். அப்போது மேடையில் நடந்த ராமாயண நாடக நிகழ்ச்சியை கண்டுகளித்தார்.
இதனைத் தொடர்ந்து உரையாற்றிய அவர், ஸ்ரீராமர் அயோத்திக்கு வருவதற்கு இன்னும் சில நாட்களே உள்ளதாக, அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ராமர் கோயிலை சுட்டிக்காட்டி பேசினார். நவராத்திரி கொண்டாட்டங்களில் ராவணனின் உருவ பொம்மைகளை தீயிட்டு கொளுத்துவதை விட, நாட்டை பிளவுபடுத்தும் சாதி மற்றும் பிராந்தியவாதத்தை ஒழிக்க வேண்டும் என்றும் பிரதமர் மோடி தெரிவித்தார்.
இதற்கிடையே, செங்கோட்டை மைதானத்தில் நடைபெற்ற விஜயதசமி கொண்டாட்டங்களில் சோனியா காந்தி கலந்துகொண்டு சிறப்பித்தார்.