#Breaking : காலையிலேயே வந்த ஷாக் நியூஸ்..! வரலாறு காணாத புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை..! பேரதிர்ச்சியில் நகைப்பிரியர்கள்!

20220728085912 Francis Wedding Ornaments 2 1

2025 ஆம் ஆண்டில் தங்கம் விலை தொடர்ச்சியாக உயர்ந்து வருகிறது. சர்வதேச பொருளாதார மந்த நிலை, அமெரிக்க டாலர் மதிப்பு சரிவு, வட்டி விகிதக் குறைவு, பணவீக்கம் அதிகரிப்பு ஆகியவை காரணமாக உலகளாவிய முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடாக தங்கத்தை கருதுகின்றனர்.. மேலும் இந்தியாவில் திருமணம் மற்றும் பண்டிகை சீசன் காரணமாகவும் தங்கத்தின் தேவை உயர்ந்துள்ளது.


கிட்டத்தட்ட 15 நாட்களாகவே தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வந்தது.. அதன்படி கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது.. அந்த வகையில், கடந்த வாரம் ஒரு சவரன் தங்கம் விலை ரூ. 81,000ஐ கடந்ததால் நகைப்பிரியர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்தனர்.. இடை இடையே சிறிதளவு தங்கம் விலை குறைந்தாலும், பெரியளவில் விலை குறையவில்லை..

இந்த நிலையில் சென்னையில் இன்று தங்கம் விலை வரலாறு காணாத புதிய உச்சத்தை தொட்டுள்ளது.. அதன்படி சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு ரூ.70 உயர்ந்து ரூ.10,280க்கு விற்பனையாகிறது.. இதனால் ஒரு சவரனுக்கு ரூ. 560 உயர்ந்து ரூ. 82,240-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலையில் மாற்றம் இல்லாமல் கிராம் ரூ.143-க்கும், ஒரு கிலோ ரூ.1.43 லட்சத்துக்கும் விற்பனையாகிறது. தொடர்ந்து உயர்ந்து வந்த தங்கம் விலை இன்று சற்று குறைந்துள்ளதால் நகைப்பிரியர்கள் நிம்மதி அடைந்துள்ளனர்..

Read More : முதல் 15 நிமிடங்களுக்குள் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்ய ஆதார் கட்டாயம்.. அக்டோபர் 1 முதல் அமல்..!!

RUPA

Next Post

நீங்களும் தினமும் பிளாஸ்டிக் பாக்ஸில் சாப்பிடுறீங்களா? அது எவ்வளவு ஆபத்துன்னு தெரிஞ்சா மீண்டும் தொடவே மாட்டீங்க!

Tue Sep 16 , 2025
இந்த அதிநவீன காலக்கட்டத்தில், பிளாஸ்டிக் பாத்திரங்கள் நம் வாழ்வின் ஒரு பகுதியாக மாறிவிட்டன. வீடு, அலுவலகம், பள்ளிகள், கல்லூரிகள் என எங்கு பார்த்தாலும், பிளாஸ்டிக் பொருட்கள் பெரும்பாலும் காணப்படுகின்றன. டிபன் பாக்ஸ், தண்ணீர் பாட்டில்கள், ஒருமுறை பயன்படுத்திவிட்டு தூக்கி எறியும் தட்டுகள், கோப்பைகள் ஆகியவை எளிதில் கிடைப்பது, மலிவானது மற்றும் எடுத்துச் செல்வது எளிது என்பதால் அனைவரும் அவற்றைப் பயன்படுத்துகிறார்கள். ஆனால் இந்த வசதிக்குப் பின்னால் மறைந்திருக்கும் உடல்நலப் பிரச்சினைகளை […]
plastic box side effects

You May Like