தலைவலி என்பது பலருக்கும் ஏற்படும் ஒரு சாதாரண பிரச்சனைதான். ஆனால் சில தலைவலிகள், உடலின் தீவிரமான பிரச்சனைகளை உணர்த்தும் என்று எய்ம்ஸ் நரம்பியல் நிபுணர் டாக்டர் பிரியங்கா செஹ்ராவத் எச்சரித்துள்ளார்.
கவனிக்க வேண்டிய 5 முக்கிய அறிகுறிகள் :
பார்வைக் கோளாறுகள் : தலைவலியுடன் சேர்ந்து, மங்கலான பார்வை, இரட்டைப் பார்வை, பார்வைக்குறைவு அல்லது காதுகளில் சத்தம் கேட்பது போன்ற அறிகுறிகள் ஏற்பட்டால், அது மூளையின் அழுத்தம் அதிகரித்திருப்பதற்கான அறிகுறியாக இருக்கலாம்.
தலைவலியின் தன்மையில் மாற்றம் : உங்களுக்கு இதுவரை இருந்து வந்த தலைவலியின் தன்மை திடீரென மாறினாலோ, வலி அதிகரித்தாலோ அல்லது வாந்தியுடன் சேர்ந்து கடுமையான வலி ஏற்பட்டாலோ உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும். இது மூளையில் அழுத்தம் அதிகரித்திருப்பதை குறிக்கும்.
காய்ச்சல், வாந்தியுடன் கூடிய தலைவலி : காய்ச்சல், வாந்தி மற்றும் கழுத்து விறைப்புடன் கூடிய கடுமையான தலைவலி ஏற்பட்டால் அது மூளைக் காய்ச்சல் போன்ற தீவிர நோய்த்தொற்றுகளின் அறிகுறியாக இருக்கலாம்.
பலவீனம் மற்றும் உணர்வின்மை : தலைவலியுடன் சேர்ந்து கைகள் மற்றும் கால்களில் திடீர் பலவீனம், உணர்வின்மை அல்லது சமநிலை இழப்பு போன்றவை ஏற்பட்டால், அது பக்கவாதம் அல்லது பிற நரம்பியல் கோளாறுகளின் அறிகுறியாக இருக்கலாம்.
50 வயதிற்குப் பின் தலைவலி : 50 வயதிற்குப் பிறகு திடீரென கடுமையான தலைவலி ஏற்பட்டால், அது பக்கவாதம் அல்லது மூளையில் உள்ள கட்டிகளின் அறிகுறியாக இருக்கலாம். இதுபோன்ற புதிய தலைவலியைப் புறக்கணிப்பது உயிருக்கே ஆபத்தாக முடியலாம்.
Read More : உங்கள் குழந்தைக்கு ஆதார் அட்டை எடுக்குறீங்களா..? அதிரடியாக வந்த மாற்றம்..!! பெற்றோர்களே இதை படிங்க..!!