fbpx

உயிரிழந்த புலியின் தலை, கால்களை வெட்டி எடுத்து சென்ற கும்பல்..!

அழிந்து வரும் உயிரினங்களின் ஒன்றும், நமது நாட்டின் தேசிய விளங்குமானது புலி. புலி தாக்குதல் காரணாமாக மாக்கள் அச்சத்தில் இருந்தாலும், தேசிய விலங்கான புலியை காப்பது நமது கடமையாகும். ஆனால் மின்சார வெளியில் மாட்டி உயிரிழந்த புலியின் தலை மற்றும் கால்களை மர்ம நபர்கள் வெட்டி எடுத்துச் சென்ற சம்பவம், பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிரா மாநிலம் கட்சிரோலி வனப்பகுதி அருகே சட்கோன் கிராமம் உள்ளது. வனப்பகுதி அருகிலே இந்த கிராமம் உள்ளதால் புலியின் நடமாட்டத்திற்கு அஞ்சி விளைநிலங்களுக்கு அருகில் மின்சார வேலிகள் அமைத்திருக்கின்றனர் அந்த கிராம மக்கள்.
அப்படி அமைக்கப்பட்டிருக்கும் மின்சார வேலியில் சிக்கி இரு தினங்களுக்கு முன் புலி ஒன்று உயிரிழந்துள்ளது. ஆனால் அந்த உயிரிழந்த புலியின் தலை மட்டும் கால்கள் வெட்டப்பட்டிருப்பது அந்த கிராம மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. புலியின் பல் மற்றும் நகங்களை எடுப்பதற்காக தலை மற்றும் கால்களை வெட்டி எடுத்து சென்றுள்ளனர், அடையாளம் தெரியாத நபர்கள். பின்னர் உயிரிழந்த புலியின் உடலை மீட்டுள்ள வனத்துறையினர், இந்த கொடூர சம்பவத்தில் ஈடுபட்டது யார் என்பது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் புலி எதிர்பாராமல் மின்சார வேலியில் சிக்கியதா அல்லது வேட்டைக்காரர்கள் புலியைக் கொலை செய்யும் நோக்கோடு இந்த சம்பவத்தில் ஈடுபட்டார்களா என்பது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் மகாராஷ்டிரா மாநிலத்தில் 18 சிறுத்தைகள், 16 புலிகள் மற்றும் 11 கரடிகள் மின்வேலிகளில் சிக்கி உயிரிழந்துள்ளன.

Kathir

Next Post

தும்மும் போது கடவுளின் பெயரை சொல்லச் சொல்வது ஏன் தெரியுமா?… சுவாரஸ்ய தகவல்களை அறிவோம்!

Sat Oct 28 , 2023
நாம் தும்மும் போது கடவுளின் பெயரை சொல்லச் சொல்வது ஏன் தெரியுமா? தும்மல் வரும் ஒரு நொடி நம் இதயம் நிற்கும். உடலில் பல்வேறு தன்னிச்சையான செயல்கள் நமது கட்டுப்பாடு இல்லாமல் நடைபெறும். அதில் ஒன்று தும்மல். பாக்டீரியாக்கள், வைரஸ்கள் போன்ற தொற்றுக்கிருமிகள் ஒருவரிடம் இருந்து மற்றவருக்கு பரவுவதற்கான வழிகளில் தும்மல் முக்கியமானது. மூக்கு, நுரையீரல், கண் மற்றும் காதுகளில் இருக்கும் கிருமிகள் ஒவ்வாமையை உண்டாக்கும்போது ஏற்படும் எரிச்சல் உணர்வே […]

You May Like