fbpx

எச்சரிக்கை..!! தமிழ்நாட்டில் ஒரு வாரத்திற்கு சம்பவம் இருக்கு..!! எங்க போனாலும் குடையை மறந்துறாதீங்க..!!

இலங்கை மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியால், தமிழ்நாட்டில் அடுத்த 7 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இலங்கை மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால், இன்று (அக்.28) தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, ராமநாதபுரம் மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. மேலும், இந்த கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்று தொடங்கி நவ.3 ந் தேதி வரை அடுத்த 7 நாட்களுக்கு தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி, காரைக்கால் உள்ள பெரும்பாலான பகுதிகளில் மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்சியஸை ஒட்டியும் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 25-26 டிகிரி செல்சியஸாகவும் இருக்கக்கூடும்’’ என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

Chella

Next Post

மகளிர் உரிமைத்தொகை..!! பெண்களே கவலைப்படாதீங்க..!! அமைச்சர் உதயநிதி சொன்ன குட் நியூஸ்..!!

Sat Oct 28 , 2023
மகளிர் உரிமைத்தொகை பெறுவதற்காக, தமிழ்நாடு முழுவதுமிருந்து 11 லட்சம் மேல்முறையீட்டு மனுக்கள் பெறப்பட்டன. அவற்றை சார் ஆட்சியர், துணை ஆட்சியர், வருவாய் கோட்ட அலுவலர்கள் பரிசீலித்து வருகின்றனர். இந்நிலையில், இந்த விவகாரத்தில் அமைச்சர் உதயநிதியின் நடவடிக்கைகள் பலரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது. இரண்டு நாளைக்கு முன்பு விருதுநகர் மாவட்டம் சாத்தூர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் மேல்முறையீட்டு விண்ணப்பங்கள் பரிசீலனை செய்யப்படும் பணிகளை உதயநிதி ஆய்வு செய்திருந்தார். அப்போது, மேல்முறையீடு செய்திருந்த […]

You May Like