Flash : “பாமக தலைவர் ராமதாஸ் தான்.. அன்புமணி மாமல்லபுரத்தில் கூட்டிய பொதுக்குழு செல்லாது..” ஜி.கே மணி பதிலடி!

gk mani anbumani ramadoss

பாமக நிறுவனர் ராமதாஸ் – அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல் போக்கு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.. இருவருக்கும் இடையேயான மோதலை முடிவுக்கு கொண்டு வர பாமக நிர்வாகிகள் சார்பில் பல சமசர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.. ஆனால் இந்த முயற்சிகள் அனைத்தும் தோல்வியில் முடிந்தது.. ஆனால், என் மூச்சிருக்கும் வரை நான் தான் தலைவர் என்று திட்டவட்டமாக ராமதாஸ் கூறி வருகிறார்.. மேலும் அன்புமணி மீது ராமதாஸ் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறார்..


இந்த நிலையில், அன்புமணியை பாமகவின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கி ராமதாஸ் உத்தரவிட்டார்..

ஆனால் ராமதாஸின் அறிவிப்பு அன்புமணியை கட்டுப்படுத்தாது என்றும், பாமக தலைவர் அன்புமணியை கட்சியில் இருந்து நீக்க ராமதாஸுக்கு அதிகாரம் இல்லை என்றும் அன்புமணி தரப்பு வழக்கறிஞர் டி.ஆர். பாலு தெரிவித்தார்.. மேலும் “ ராமதாஸ் பாமகவின் நிறுவனர் மட்டுமே அந்த நிலையில், கட்சி நிர்வாகப் பணிகளை மேற்கொள்ள அவருக்கு அதிகாரம் உள்ளது..

அன்புமணி தரப்பு கூட்டிய பாமக பொதுக்குழுவை தேர்தல் அங்கீகரித்துள்ளது.. அன்புமணி பதவிகாலம் நீட்டிக்கப்பட்டதை அதிகாரப்பூர்வமாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. எனவே அன்புமணி தான் பாமகவின் தலைவர்.. கட்சி விதிகளின் அடிப்படையில் அன்புமணி தலைவராகவே நீடிக்கிறார்..” என்று தெரிவித்தார்..

இந்த நிலையில் பாமகவின் தலைவர் ராமதாஸ்தான் என்று ராமதாஸ் தரப்பை சேர்ந்த ஜி.கே மணி தெரிவித்துள்ளார்.. இதுகுறித்து இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர் ” பாமகவின் நிர்வாகக் குழு கூடி, அதன் தலைவராக ராமதாஸையே தேர்வு செய்துள்ளது.. ராமதாஸ்-க்கு தெரியாமல் கட்சியின் அலுவலக முகவரி தேர்தல் ஆணையத்தில் மாற்றப்பட்டுள்ளது. பாமகவின் தலைவர் பதவியில் அன்புமணி தற்போது கிடையாது.. 2025 மே மாதத்துடன் அன்புமணியின் பதவிக்காலம் முடிந்துவிட்டது..

தலைவர் பொறுப்பில் இல்லாத அன்புமணி, மாமல்லபுரத்தில் அன்புமணி கூட்டிய பொதுக்குழு கூட்டம் செல்லாது.. பாமக நிறுவனரின் ஒப்புதல் இல்லாமல் நிறுவன குழு, செயற்குழு என எந்த நடவடிக்கையும் கூடாது என்பது விதி..

பாமக நிறுவனர் மற்றும் தலைவர் மருத்துவர் ராமதாஸ் தான்.. இதில் இது இறுதி முடிவு. இதில்ல் எந்த மாற்றமும் இல்லை.. ஆனால் தலைவர் என்று பெயரிட்டு கடிதம் எழுதுவது ஒரு மோசடியான செயல். ஒரு கடிதத்தை வைத்து எங்களுக்கு தான் மாம்பழ சின்னம், அன்புமணி தான் பாமக தலைவர் என்று கூறுவது மோசடி..” என்று தெரிவித்தார்..

Read More : கூவத்தூரில் நடந்தது இது தான்..! இபிஎஸ் இந்த தேர்தலில் மிகப்பெரிய தோல்வியை சந்திப்பார்.!டிடிவி தினகரன் காட்டம்!

RUPA

Next Post

கள்ளக்காதலனுடன் உல்லாசமாக இருந்த பக்கத்து வீட்டுப் பெண்..!! செல்போனில் வீடியோ எடுத்த இளைஞர்..!! சினிமாவை மிஞ்சும் சம்பவம்..!!

Tue Sep 16 , 2025
திரைப்படங்களில் நாம் பார்க்கும் சம்பவங்கள் நிஜத்திலும் சில சமயங்களில் அரங்கேறுவது உண்டு. ‘திருட்டுப் பயலே’ படத்தில் நடிகர் ஜீவன் ஒரு தம்பதியின் கள்ளத்தொடர்பை வீடியோ எடுத்து அவர்களை மிரட்டிப் பணம் பறிப்பார். அதேபோல், கேரளாவில் திருமணமான ஒரு பெண்ணின் தனிப்பட்ட வாழ்க்கையை படம்பிடித்து, அவரை மிரட்டிப் பணம் பறித்த இருவர் தற்போது போலீசிடம் சிக்கியுள்ளனர். கேரள மாநிலம் கண்ணூர் அருகே உள்ள பல்லித்தட்டு பகுதியைச் சேர்ந்தவர் 21 வயதான சமல். […]
Video 2025 1

You May Like