fbpx

தேர்தல் பிரச்சாரம் செய்த எம்பிக்கு கத்திக்குத்து..!! மர்ம நபரை சரமாரியாக தாக்கிய தொண்டர்கள்..!! பெரும் பரபரப்பு..!!

தெலங்கானா மாநிலத்தில் சட்டசபை தேர்தல் வரும் நவம்பர் 30ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த தேர்தலில் எப்படியும் ஆட்சியை தக்க வைத்துக் கொள்ள முதல்வர் சந்திரசேகர ராவ் போராடி வருகிறார். அந்த வகையில், பிஆர்எஸ் கட்சியின் சார்பில் துப்பாக் சட்டசபை தொகுதிக்கு மேடாக் எம்பி பிரபாகர் ரெட்டி அறிவிக்கப்பட்டார். இதையடுத்து, அவர் இன்று தனது தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தார்.

அப்போது அவர், சித்திபெட் மாவட்டத்தில் தவுலதாபாத் பகுதியில் சுரம்பள்ளி கிராமத்தில் பிரச்சாரம் செய்து கொண்டிருந்தார். கூட்டத்தில் மர்ம நபர் வேட்பாளர் பிரபாகர் ரெட்டிக்கு கை குலுக்க சென்றார். இதையடுத்து, அவரும் கை கொடுத்தார். அப்போது திடீரென அந்த நபர் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் பிரபாகர் ரெட்டியை குத்தினார்.

இதில் அவருக்கு வயிற்று பகுதியில் காயம் ஏற்பட்டது. உடனே கட்சி நிர்வாகிகளும் பிரபாகர் ரெட்டி ஆதரவாளர்களும் அந்த நபரை மடக்கி பிடித்து சரமாரியாக தாக்கினர். அந்த மர்மநபரின் பெயர் ராஜு என தெரியவந்தது. அவர் கத்தியால் ஏன் குத்தினார் என தெரியவில்லை. இதையடுத்து பிரபாகர் ரெட்டி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். இதுகுறித்து தகவலறிந்த போலீசார், அந்த நபரை கைது செய்து விசாரித்து வருகின்றனர். இந்த கத்திக்குத்து சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Chella

Next Post

பிரதீப்புக்கு ஸ்கெட்ச் போடும் புதிய போட்டியாளர்கள்..!! ஐடியா கொடுக்கும் விசித்ரா..!!

Mon Oct 30 , 2023
பிக்பாஸ் சீசன் 7இல் வைல்ட் காட் என்ட்ரியாக உள்ளே நுழைந்த எல்லோரையும் பூர்ணிமா ஸ்மால் பாஸ் வீட்டிற்கு அனுப்புவதற்காக நாமினேஷன் செய்கிறார். இதைப் பார்த்த அர்ச்சனா அப்போ எல்லாரும் பிளான் பண்ணித் தான் பண்ணுறீங்களா என்று கேட்க, பிளான் பண்ணித் தான் பண்ணுறோம் என்று சொல்ல வைல்ட்காட் என்ட்ரியாக நுழைந்தவர்களுக்கும் பிக்பாஸ் வீட்டிற்குள் இருப்பவர்களுக்கும் இடையில் மோதல் ஏற்படுகின்றது. ஸ்மால் பாஸ் வீட்டில் இருக்கும் விசித்ரா புதிதாக வந்த போட்டியாளர்களிடம் […]

You May Like