விவாகரத்து வழக்குகளில், மனைவியின் விருப்பத்திற்கேற்ப கணவர்கள் ஜீவனாம்சம் வழங்க வேண்டியது கட்டாயம். இந்தப் பணம் மொத்தமாகவோ அல்லது மாதந்தோறும் கூட வழங்கப்படலாம். இந்நிலையில், கணவனுக்கு வருமானம் இல்லாவிட்டாலும் ஜீவனாம்சம் வழங்க வேண்டும் என்று கொல்கத்தா உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
கொல்கத்தா உயர்நீதிமன்றத்தில் கணவன், தனது மனைவி மாதம் ரூ.12,000 சம்பாதிப்பதாகவும், தான் வேலையில்லாமல் இருப்பதாகவும் கூறி, ஜீவனாம்சம் வழங்க முடியாது என்று மனு தாக்கல் தாக்கல் செய்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், கணவனின் கோரிக்கையை ஏற்க மறுத்தது.
உயர்நீதிமன்றம் தனது தீர்ப்பில், “ஒரு மனைவிக்கு ஜீவனாம்சம் கொடுப்பது கணவனின் தார்மீகப் பொறுப்பு. கணவனுக்கு வருமானம் இல்லாவிட்டாலும், மனைவிக்கு ஜீவனாம்சம் வழங்குவது ஒரு சமூக, சட்ட மற்றும் தார்மீகப் பொறுப்பாகும்” என்று தெரிவித்துள்ளது.
இதையடுத்து, நீதிமன்றம் அந்த கணவன், தனது மனைவிக்கு மாதந்தோறும் ரூ.4,000 ஜீவனாம்சம் வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டது. இந்நிலையில், இந்த உத்தரவை எதிர்த்து, அந்த கணவர் மேல்முறையீடு செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.



