fbpx

‘இந்த நேரத்தில் மட்டும் தான் பட்டாசு வெடிக்க வேண்டும்’..!! உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு..!!

‘சுற்றுச்சூழலை பாதிக்காத பட்டாசுகளை வெடிக்கலாம். அதுவும் இரண்டு மணி நேரம் மட்டும் பட்டாசு வெடிக்க அனுமதி’ என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு உலகம் முழுவதும் பட்டாசு வெடித்து கொண்டாடுவது வழக்கம். அந்த வகையில், இந்தாண்டு தீபாவளி பண்டிகை நவம்பர் 12ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இதில் சரவெடி மற்றும் பேரியம் மூலப்பொருளில் தயாராகும் பட்டாசுகளுக்கு அனுமதி கோரி உச்சநீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.

இதனை விசாரித்த உச்சநீதிமன்றம், ‘சுற்றுச்சூழலை பாதிக்காத பட்டாசுகளை வெடிக்கலாம் என்றும் அதுவும் 2 மணி நேரம் மட்டும் பட்டாசு வெடிக்க அனுமதி என்றும் உத்தரவிட்டுள்ளது. பேரியம், சரவெடி தொடர்பான மனுக்களை தள்ளுபடி செய்தது. வெறும் 2 மணிநேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க சில ஆண்டுகளாக தொடர்ந்த உத்தரவே இந்தாண்டும் நீடிப்பதால், தீபாவளி பண்டிகையை எதிர்நோக்கி காத்திருந்த பட்டாசு தொழிலாளர்களுக்கு வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

Chella

Next Post

தீபாவளிக்கு முன் மிகப்பெரிய சர்ப்ரைஸ்..!! ஊழியர்களுக்கு அடிக்கப்போகும் ஜாக்பாட்..!!

Wed Nov 1 , 2023
மத்திய அரசு ஜூலை, 1ஆம் தேதி முதல் 4 சதவீதம் அகவிலைப்படியை உயர்த்தியுள்ளது. இதையடுத்து, மற்ற ஊழியர்களின் அகவிலைப்படியை உயர்த்தும் பணி துவங்கியுள்ளது. இதனுடன், அவர்களுக்கு போனஸ் சலுகைகளும் வழங்கப்பட்டு வருகின்றன. பாதுகாப்பு ஊழியர்களுக்கு போனஸ் தொகை 76 நாள் சம்பளத்தின் படி வழங்கப்படும். உற்பத்தி அல்லாத போனஸிற்காக, நவம்பர் 10-க்குள் பாதுகாப்பு ஊழியர்களின் கணக்குகளுக்குத் தொகையை அனுப்புமாறு பாதுகாப்பு அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. ஜேசிஓக்கள், ஓஆர்கள் மற்றும் கடற்படை உள்ளிட்ட […]

You May Like