சத்தீஸ்கர் மாநிலம் ராய்பூரில் ‘பண்ணை வீட்டில் நிர்வாண விருந்து’ என்ற அறிவிப்பு சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஐரோப்பா மற்றும் அமெரிக்காவில் நடக்கும் இத்தகைய கேளிக்கை நிகழ்ச்சிகள் தற்போது இந்தியாவிலும் நிகழ்ந்து வருகிறது. பெங்களூரு போன்ற நகரங்களில் ஏற்கனவே ரேவ் பார்ட்டிகள் என்ற பெயரில், போதைப்பொருள் மற்றும் ஆபாச நடனங்கள் நடந்து வருகிறது.
இந்நிலையில், ராய்பூரில் செயல்பட்டு வரும் சில பிரபல கிளப்கள் மற்றும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் இணைந்து, ஒரு பிரபலமான பண்ணை வீட்டில் இந்த ‘நிர்வாண விருந்துக்கு’ திட்டமிட்டிருந்தனர். இதில் கலந்துகொள்ள காதல் ஜோடிகள், இளம் தம்பதியினர் மற்றும் சினிமா நடிகைகள் என பலரும் ஆர்வம் காட்டியுள்ளனர். இந்நிகழ்ச்சி குறித்த இடம் ரகசியமாக வைக்கப்பட்டிருந்த நிலையில், இதில் கலந்துகொள்பவர்கள் செல்போன் கொண்டு வரக் கூடாது என்ற கட்டுப்பாடும் விதிக்கப்பட்டது.
மேலும், இந்நிகழ்ச்சியில் கலந்துகொள்ள ஒரு நபருக்கு ரூ.40,000 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டது. இருப்பினும், சிலர் ரூ.1 லட்சம் வரை தரவும் சம்மதம் தெரிவித்தனர். ‘இது இளைஞர்களுக்கான ஒரு உயர்மட்டக் கூட்டம், இதில் நிர்வாணமாகக் கலந்து கொள்ளலாம்’ என்று சோசியல் மீடியா விளம்பரம் தான் இந்த ஆர்வத்திற்கு முக்கிய காரணம்.
இந்த அறிவிப்பு சத்தீஸ்கர் மாநிலம் முழுவதும் பரவியதால், அரசியல் கட்சிகளும், பொதுமக்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து, காவல்துறையினர் உடனடியாக இந்த விவகாரத்தில் தலையிட்டு விசாரணை நடத்தினர். பின்னர், இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்ததாக கூறப்படும் 7 பேரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Read More : வந்தாச்சு அறிவிப்பு..!! “கலைஞர் கனவு இல்லம்” திட்டத்தில் 10,000 வீடு..!! உடனே அப்ளை பண்ணுங்க..!!