‘மெஹந்தி சர்க்கஸ்’ திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமான மாதம்பட்டி ரங்கராஜ், தற்போது சமையல் துறையில் முன்னணி தொழிலதிபராக இருந்து வருகிறார். விஐபிக்களின் திருமணங்களில் உணவு சமைப்பதில் இவரது தொழில் பிரபலமானது. இதையடுத்து, ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியில் நடுவராகவும் இருந்து வருகிறார்.
இந்நிலையில், சமீப காலமாக மாதம்பட்டி ரங்கராஜ் மற்றும் ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிஸில்டா ஆகியோரின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்த விவகாரம் தமிழ்நாட்டில் பூதாகரமாக வெடித்துள்ளது. ஏற்கனவே திருமணமாகி 2 குழந்தைகள் இருக்கும் நிலையில், ஜாய் கிரிஸில்டாவை ரகசியமாக 2-வது திருமணம் செய்து கொண்டார் மாதம்பட்டி ரங்கராஜ்.
சில மாதங்களுக்கு முன்பு, தான் 7 மாதம் கர்ப்பமாக இருப்பதாக கூறி சமூக வலைத்தளங்களில் புகைப்படங்களைப் பகிர்ந்தார் ஜாய் கிரிஸில்டா. பிறகு, மாதம்பட்டி ரங்கராஜ் தன்னை ஏற்க மறுப்பதாகவும், அடித்துத் துன்புறுத்துவதாகவும் பகிரங்கமாக குற்றம்சாட்டினார். மேலும், அவர் மீது காவல்நிலையத்திலும் புகாரளித்துள்ளார்.
இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து ஒரு ஊடகத்திற்கு பேட்டியளித்த பாடகி சுசித்ரா, சில அதிர்ச்சிகரமான தகவல்களை வெளியிட்டார். ஜாய் கிரிஸில்டாவுக்குப் பல ஆண்களுடன் பழக்கம் உண்டு. நடிகர்கள் விஜய், ஜெயம் ரவி உள்ளிட்ட பலருடன் ஜாய் கிரிஸில்டா பழகியுள்ளார். ஆனால், அஜித் அவரிடம் இருந்து விலகி இருந்தார். ஏனென்றால், “அஜித்திடம் பயப்படுவார்கள்” என்றும் சுசித்ரா குறிப்பிட்டார்.
இந்த விவகாரத்தில், ஜாய் கிரிஸில்டா “கருவிலே உயிர் உருவாகும் போது உயிர் கொடுத்தவன் கடமையை மறக்கக்கூடாது” என ஒரு உருக்கமான பதிவை வெளியிட்டு, மாதம்பட்டி ரங்கராஜுடன் அவர் திருமணம் செய்துகொண்ட வீடியோவையும் பகிர்ந்துள்ளார். இச்சம்பவம், கோலிவுட் வட்டாரங்களில் விவாதப் பொருளாக மாறியுள்ளது.
Read More : Just Now | இனி பனை மரம் வெட்ட மாவட்ட ஆட்சியரின் அனுமதி கட்டாயம்..!! தமிழ்நாடு அரசு அதிரடி அறிவிப்பு..!!



