நோட்…! இன்று காலை 10 மணி முதல் இலவச வேலைவாய்ப்பு முகாம்…! மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு..!

college admission 2025

தருமபுரி மாவட்டத்தில் இன்று தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்” நடைபெறுகிறது.


இது குறித்து மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட செய்தி குறிப்பில்; தருமபுரி மாவட்ட வேலைவாய்ப்பு (ம) தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில், தனியார்துறை நிறுவனங்களும் – தனியார்துறையில் பணிபுரிய விருப்பம் உள்ள மனுதாரர்களும் கலந்துகொள்ளும் “தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்” நடைபெறுகிறது. எனவே, தனியார்துறை நிறுவனங்கள் தங்களுக்கு தேவையான நபர்களை நேரடியாக தேர்வு செய்து கொள்ளலாம். இது ஒரு இலவச பணியே ஆகும். இதன் மூலம் தனியார்துறையில் வேலைவாய்ப்பு பெறுபவர்களுக்கு. அவர்களது வேலைவாய்ப்பு பதிவு ரத்து செய்யப்படமாட்டாது.

இம்முகாமில், பல்வேறு தனியார் நிறுவனங்கள் கலந்துகொண்டு. விற்பனையாளர். மார்க்கெட்டிங் எக்ஸிக்யூட்டிவ், சூப்பர்வைசர். மேலாளர். கம்ப்யூட்டர் ஆப்ரேட்டர், அக்கவுண்டன்ட், மெக்கானிக் போன்ற பணிகளுக்கு தகுதியான நபர்களை தேர்வு செய்ய உள்ளனர். பள்ளிப்படிப்பு, டிப்ளமோ, பட்டப்படிப்பு என பல்வேறு கல்வித்தகுதிக்கும் ஆட்கள் தேவை என தனியார்துறை நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

ஆகவே, மேற்படி பணிகளுக்கு. தகுதியும் விருப்பமும் உள்ள அனைவரும், இன்று காலை 10 மணிக்கு, தருமபுரி மாவட்ட வேலைவாய்ப்பு (ம) தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நடைபெறவுள்ள, தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமில் கலந்துகொண்டு பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

Vignesh

Next Post

உங்கள் வேண்டுதல் அப்படியே நிறைவேற முருகப்பெருமானை இப்படி வழிபடுங்க..!! இந்த 3 பூக்கள் போதும்..!!

Fri Sep 19 , 2025
கலியுகத்தின் தெய்வமாகப் போற்றப்படும் முருகப்பெருமானை வழிபடும் பக்தர்கள், தங்கள் வேண்டுதல்கள் நிறைவேறாதபோது வருத்தம் கொள்வதுண்டு. ஆனால், இதற்கு ஒரு எளிய மற்றும் சக்திவாய்ந்த வழிபாட்டு முறை இருக்கிறது. அது என்ன என்பதை இந்தப் பதிவில் பார்க்கலாம். இந்த வழிபாட்டை, முருகனுக்கு உகந்த நாட்களான செவ்வாய்க்கிழமை, கிருத்திகை அல்லது சஷ்டி திதியில் செய்யலாம். முடிந்தால், தொடர்ந்து 6 வாரங்களுக்கு இந்த வழிபாட்டை செய்வது சிறந்த பலன்களைத் தரும். வழிபாட்டுக்கு தேவையானவை : […]
Murugan 2025

You May Like