உலக பொருளாதாரத்தில் நிலவும் ஏற்ற இறக்கங்களை பொறுத்து தங்கம் விலை ஒவ்வொரு நாளும் நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உள்ளிட்ட பல காரணிகள் தங்கம் விலை உயர்வில் முக்கிய பங்கு வகிக்கின்றன.
ரஷ்யா – உக்ரைன் மோதல், மத்திய கிழக்கில் நிலவும் பதற்றம், ட்ரம்பின் சில அதிரடி நடவடிக்கைகள் உள்ளிட்ட பல காரணங்களால் சர்வதேச அளவில் பொருளாதார ஸ்திரத்தனமை இல்லை.. இதனால் முதலீட்டாளர்கள் பாதுகாப்பு கருதி பலரும் தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர். எனவே தங்கம் என்பது தற்போது சாமானிய மக்களுக்கு எட்டாக் கனியாக மாறி உள்ளது.
கிட்டத்தட்ட 15 நாட்களாகவே தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வந்தது.. அதன்படி கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது.. அந்த வகையில், கடந்த வாரம் ஒரு சவரன் தங்கம் விலை ரூ. 81,000ஐ கடந்ததால் நகைப்பிரியர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்தனர்.. இடை இடையே சிறிதளவு தங்கம் விலை குறைந்தாலும், பெரியளவில் விலை குறையவில்லை..
அந்த வகையில், சென்னையில் 2 நாட்களுக்கு முன்பு தங்கம் விலை வரலாறு காணாத புதிய உச்சத்தை தொட்டு, சவரன் ரூ.82,000ஐ கடந்து விற்பனையானது. ஆனால் பின்னர் தங்கம் விலை சற்று குறைந்தது..
இந்த நிலையில் இன்று மீண்டும் தங்கம் விலை உயர்ந்துள்ளது… அதன்படி சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு ரூ.10 உயர்ந்து ரூ.10,230க்கு விற்பனையாகிறது.. இதனால் ஒரு சவரனுக்கு ரூ. 80 உயர்ந்து ரூ. 81,840க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
அதே போல் இன்று வெள்ளியின் விலையும் உயர்ந்துள்ளது.. ஒரு கிராம் வெள்ளி ரூ. 2 உயர்ந்து ரூ.143க்கு விற்பனை செய்யப்படுகிறது.. இதனால் ஒரு கிலோ ரூ.1,43,000க்கு விற்பனையாகிறது. தங்கம் விலை இன்று மீண்டும் உயர்ந்துள்ளதால் நகைப்பிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்..
Read More : இந்தியாவின் மிகப் பெரிய பணக்காரர்கள் தங்கள் பணத்தை எதற்காக அதிகம் செலவிடுகிறார்கள் தெரியுமா?. ஆச்சரிய தகவல்!



