நமது பயண அனுபவங்களை தீர்மானிப்பதில் ஹோட்டல்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. ஹோட்டல்களை தேர்ந்தெடுக்கும்போது, அவற்றின் வசதிகள் மற்றும் சேவையின் அடிப்படையில் ஸ்டார் மதிப்பீடுகளை நாம் கவனிக்கிறோம். பொதுவாக, ஹோட்டல்கள் 1 முதல் 5 ஸ்டார் வரை மதிப்பீடுகளை பெறுகின்றன.
ஆனால், சில ஆடம்பர ஹோட்டல்கள் அவற்றின் பிரமிக்க வைக்கும் வசதிகளுக்காக 7 ஸ்டார் ஹோட்டல்கள் என்று குறிப்பிடப்படுகின்றன. இது அதிகாரப்பூர்வ மதிப்பீடு இல்லையென்றாலும், சர்வதேச அளவில் ஒரு சிறப்பு அங்கீகாரமாக பார்க்கப்படுகிறது.
5 ஸ்டார் ஹோட்டல்கள் : ஒரு 5 ஸ்டார் ஹோட்டலில், அறைகள் மிகவும் விசாலமாகவும், பிரீமியம் தளவாடங்களுடனும் இருக்கும். நவீன வடிவமைப்புகள், டிவி, மினி-பார், பணி மேசை மற்றும் அதிவேக வைஃபை போன்ற வசதிகள் இருக்கும். இங்கு ஸ்பா, ஜிம் மற்றும் நீச்சல் குளம் போன்ற அனைத்து வசதிகளும் சிறந்த தரத்தில் கிடைக்கும்.
7 ஸ்டார் ஹோட்டல்கள் : 7 ஸ்டார் ஹோட்டல்கள் ஆடம்பரத்தின் உச்சமாக விளங்குகின்றன. இங்கு ஒவ்வொரு அறையும் அரச அரண்மனை போல வடிவமைக்கப்பட்டு, தங்கம் மற்றும் வெள்ளியால் அலங்கரிக்கப்பட்டிருக்கும். ஒவ்வொரு விருந்தினருக்கும் ஒரு தனிப்பட்ட உதவியாளர் இருப்பார்கள்.
7 ஸ்டார் ஹோட்டல்கள் வெறும் வசதிகளை வழங்குவதோடு நின்றுவிடாமல், விருந்தினர்களுக்கு ஒரு ராஜ வாழ்க்கை உணர்வை தருகின்றன. ரோல்ஸ் ராய்ஸ் கார்கள், தனிப்பட்ட ஹெலிபேட் வசதி மற்றும் படகு சேவைகள் போன்ற பிரத்யேக வசதிகளும் இங்கு உண்டு. மேலும், உலகப் புகழ்பெற்ற சமையல்காரர்களால் தயாரிக்கப்படும் சிறப்பு உணவுகள், தனிப்பட்ட ஓய்வறைகள், ஷாப்பிங் பகுதிகள் மற்றும் சில சமயங்களில் மினி தியேட்டர்களும் இருக்க்கும். சுருக்கமாக, 5 ஸ்டார் ஹோட்டல்கள் ஆடம்பரத்தை வழங்கினால், 7 ஸ்டார் ஹோட்டல்கள் அரச வாழ்க்கையை வழங்குகின்றன.