உத்தரப்பிரதேச மாநிலம் ஆக்ராவில் சுமார் ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு நடந்த ஒரு கொலை சம்பவம் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. தனது இளைய சகோதரியை விட 2 வயது இளையவளான ப்ரீத்தி (பெயர் மாற்றப்பட்டுள்ளது) மீது தீராத காதல் கொண்டிருந்த விபேஷ் என்பவர், ஒரு தவறான கற்பனையால் உயிரை இழந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 2023ஆம் ஆண்டில் விபேஷ் தனது தாய்மாமன் வீட்டிற்கு சென்றபோது, ப்ரீத்தி குளியலறைக்கு வாழைப்பழம் எடுத்துச் செல்வதை பார்த்துள்ளார். அதுபற்றி தவறாக கற்பனை செய்துகொண்ட விபேஷ், ப்ரீத்தி குளிப்பதை வீடியோ பதிவு செய்ய முயன்றுள்ளர். ஆனால், ப்ரீத்தி வாழைப்பழத்தைப் பயன்படுத்தி முகப்பருவுக்கு மசாஜ் செய்து கொண்டிருந்துள்ளார்.
பின்னர், அவர் குளித்துவிட்டு வெளியே வந்த நிலையில், அந்த வீடியோவை காட்டி, தன்னுடன் உல்லாசமாக இருக்க வேண்டும் என்று விபேஷ் மிரட்டியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த ப்ரீத்தி, உடனடியாக விபேஷை வீட்டை விட்டு வெளியேற்றிவிட்டு, தனது தந்தை தேஜ் ராமிடம் நடந்ததை கூறியுள்ளார்.
இதனால், ஆத்திரமடைந்த தேஜ் ராம், விபேஷை கடுமையாக தாக்கினார். இந்த தாக்குதலில் விபேஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பின்னர், உடலை அருகில் உள்ள ஒரு தோட்டத்தில் புதைத்துள்ளார். இந்நிலையில், கடந்த ஒன்றரை ஆண்டுகளாக விபேஷ் காணாமல் போன வழக்கை விசாரித்து வந்த போலீசார், ப்ரீத்தி மற்றும் தேஜ் ராம் மீது சந்தேகம் கொண்டு விசாரித்தபோது தான், மொத்த உண்மையும் வெளிச்சத்திற்கு வந்தது. தற்போது இருவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.