மத்தியப்பிரதேச மாநிலம் ஜாவ்ரா பகுதியைச் சேர்ந்த ஹினா கான் என்ற 25 வயது இளம்பெண், கடந்த 2023ஆம் தேதி திருமணம் செய்து கொண்டார். இவருக்கு திருமணமாகி 10 மாதங்களில் பெண் குழந்தை ஒன்று பிறந்தது. இவரின் திருமண வாழ்க்கை நன்றாக சென்று கொண்ட நிலையில், கணவரின் உடல்நலக்குறைவால் அனைத்தும் முடங்கிப்போனது.
இந்நிலையில் தான், வீட்டில் தனியாக இருந்த ஹினாவை, அவரது கணவரின் இரு சகோதரர்கள் பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். இரவில் கதவு திறந்திருந்த நிலையில், உள்ளே நுழைந்த இருவரும், ஒருவர் பின் ஒருவராக சென்று அண்ணியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். இதற்கு அவர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், குழந்தையை கொலை செய்து விடுவதாகவும் மிரட்டியுள்ளனர். மேலும், உடனது கணவரின் உடல்நலம் பெற வேண்டும் என்றால், எங்களுடன் உல்லாசத்தில் ஈடுபட வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
ஆனால், பலமுறை இதேபோல், பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட நிலையில், கணவரிடம் இதுகுறித்து அந்த பெண் தெரிவித்துள்ளார். எவ்வளவு சொல்லியும் அவர் நம்பவில்லை. பின்னர் கணவருடன் வேறு வீட்டிற்கு இடம்பெயர்ந்த போதும், இதேபோல் கொடுமைகள் நடந்தது. இதனால், மனமுடைந்து போன ஹினா, தனது பெற்றோர் வீட்டிற்கு சென்று, நடந்ததை தனது உறவினர்களிடம் கூறியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து, நடத்தப்பட்ட குடும்ப பஞ்சாயத்தில், இளம்பெண்ணுக்கு நியாயம் கிடைக்கவில்லை. இதனால், அவர் குவாலியரில் உள்ள மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து, வழக்குப்பதிவு செய்த போலீசார், விசாரணைக்குப் பின் இளம்பெண்ணை பலாத்காரம் செய்த இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.