மறந்து போனவனுக்கு மகாளயம்!. நாளை புரட்டாசி மாத மஹாளய அமாவாசை!. முன்னோர் வழிபாடு’ கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள்!

mahalaya amavasya

மகாளய அமாவாசையின் சிறப்பு என்னவென்றால், மாதாந்தோறும் அமாவாசை திதி கொடுத்தாலும் இந்த மகாளய அமாவாசை திதி கொடுப்பது காசி, ராமேஸ்வரத்தில் திதி கொடுப்பது போன்று ஆகும்.அமாவாசை நாளில் இறந்து போன முன்னோர்கள் பூமிக்கு வருவார்கள். அதாவது திதி கொடுக்கப்படாத முன்னோர்களுக்கு வழக்கமாக காசி ராமேஸ்வரத்தில் சென்று தான் திதி கொடுப்பார்கள் . ஆனால் அதனை இந்த மகாளய அமாவாசையில் செய்யலாம் என்று சாஸ்திரங்கள் சொல்கின்றன. மகாளய அமாவாசையில் நூறு கோதானங்கள் செய்த பலனாக கிடைக்கும் அன்னதானம் செய்ய வேண்டும்.


திருமணம் ஆகாதவர்கள் குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் இந்த மகாலய அமாவாசையில் முன்னோர்களை நினைத்து அன்னதானம் வழங்கினால் அவர்கள் நினைத்த அனைத்தும் நிறைவேறும். மஹாளய அமாவாசை அன்று தர்ப்பணம் கொடுக்க உகந்த நேரம் என்ன என்று தெரிந்துகொள்வோம்.

புரட்டாசி மாதத்தின் விசேஷங்களில் ஒன்று மஹாளய அமாவாசை. புரட்டாசி மாதத்தின் முதல் 15 நாள்கள் மகாளயபட்சம் என்று போற்றப்படுகிறது. தட்சிணாயினப் புண்ணியகாலமான ஆடி மாத அமாவாசை அன்று பித்ருக்கள் தங்கள் உலகங்களில் இருந்து புறப்பட்டு புரட்டாசி மாதம் பூவுலகுக்கு வந்து சேர்வார்கள்

புரட்டாசி மாதம் அமாவாசை தினம் வரை அவர் நம்மோடு தங்கியிருப்பதாக ஐதிகம். எனவேதான் அந்தப் பதினைந்து நாள்களும் முன்னோர்கள் வழிபாடு மேற்கொள்ளவேண்டும் என்று நம் முன்னோர்கள் கருதினர்.

ஆனால் எல்லோராலும் பதினைந்து நாள்களும் வழிபாடு செய்ய இயலாது. என்றாலும் குறைந்தபட்சம் மகாளய அமாவாசை தினத்திலாவது முன்னோர் வழிபாடு செய்ய வேண்டியது அவசியம்.

நாளை மகாள அமாவாசை வருகிறது. நாள் முழுவதும் அமாவாசை திதி உள்ளது. எனவே நாளை உச்சி வேளைக்கு முன் முன்னோர்களுக்குத் தர்ப்பணம் கொடுத்து வழிபடுவது விசேஷம். காலையில் எழுந்து குளித்து நீராடிப் பின் தர்ப்பணம் செய்து பிறகு வீட்டில் விளக்கேற்றி வழிபாடு செய்வது அவசியம்.

நதிக்கரைகளில் சமுத்திரக் கரைகளில் மகாளய அமாவாசை தர்ப்பணம் செய்வது மிகவும் சிறப்பு. இயலாதவர்கள் வீட்டிலேயே செய்யலாம். எள்ளும் தண்ணீரும் எடுத்துக்கொண்டு முன்னோர்களின் பெயரைச் சொல்லி விடுவதன் மூலம் முன்னோர்களை எளிதாகத் திருப்தி செய்ய முடியும். மகாளய அமாவாசை நாளில் செய்யும் தர்ப்பணம் பித்ருக்களின் ஆசியைப் பெற்றுத்தரும். ஆண்டுதோறும் முன்னோர் வழிபாடு செய்யாதவர்கள்கூட இந்த நாளில் செய்கிறபோது ஆண்டுமுழுவதும் வழிபட்ட பலன் கிடைத்துவிடும்.

அமாவாசை தேதி தொடங்குகிறது – செப்டம்பர் 21, மதியம் 12:16 மணிக்கு
அமாவாசை திதி முடிகிறது – செப்டம்பர் 22, அதிகாலை 1.23
குதுப் முஹூர்த்தம் – காலை 11:50 – மதியம் 12:38
ரோகிணி முஹூர்த்தம் – 12:38 pm – 01:27 pm
மதியம் நேரம் – மதியம் 01:27 – மதியம் 03:53

மேற்கு வங்காளத்தில், மகாளய அமாவாசை நவராத்திரி பண்டிகையின் தொடக்கத்தைக் குறிக்கிறது. துர்கா தேவியின் பக்தர்கள் இந்த நாளில்தான் துர்கா தேவி பூமிக்கு அவதரித்ததாக நம்புகிறார்கள்.

மகாளய அமாவாசை அன்று, ஒரு நதி அல்லது குளத்தின் கரையில் தெற்கு நோக்கி எள் மற்றும் பார்லி கலந்த தண்ணீரை தர்ப்பணமாக அர்ப்பணித்து, பிராமணர்களுக்கு உணவளித்து, தானம் செய்யுங்கள்.

முன்னோர்களுக்கு உணவளிக்க, பசு, கடவுள்கள் மற்றும் தெய்வங்கள், காகம், நாய் மற்றும் எறும்புகளுக்கு வாழை இலையில் பஞ்சபலி போக் வழங்குங்கள்.

இரவில் ஆற்றங்கரையில் விளக்குகளை தானம் செய்யுங்கள். மேலும், உங்கள் வீட்டில் தண்ணீர் சேமித்து வைத்திருக்கும் இடத்தில் எண்ணெய் விளக்கை ஏற்றுங்கள். ஒரு அரச மரத்தின் அருகிலும் விளக்கை ஏற்றுங்கள்.

உங்கள் முன்னோர்களிடம் தெரிந்தோ தெரியாமலோ செய்த தவறுகளுக்கு மன்னிப்பு கேட்டு, அவர்களின் ஆசீர்வாதங்களை பெறுங்கள்.

இந்த தவறை செய்யாதே: மகாளய அமாவாசை நாளில், தெரிந்த அல்லது தெரியாத எந்தவொரு நபரின் உணர்வுகளையும் தவறுதலாக கூட புண்படுத்தாதீர்கள். வெறுப்பை வளர்த்துக் கொள்வதைத் தவிர்க்கவும். உங்கள் வீட்டில் தூய்மையைப் பேணுங்கள்.

மறந்து போனவனுக்கு மகாளயம்

ஆண்டுக்கு ஒருமுறை இறந்துபோன பெற்றோருக்குத் திதி கொடுப்பது அவசியம். ஆனால் பெற்றோர் இறந்த நாள், திதி அறியாதவர்கள் மகாளய அமாவாசை நாளில் கொடுக்கலாம். அதனால்தான் மறந்துபோனவனுக்கு மகாளயம் என்கிறார்கள் முன்னோர்கள். மகாளய அமாவாசை நாளில் செய்யும் முன்னோர் வழிபாடு 21 தலைமுறை பித்ருக்களுக்கு வழிகாட்டும். அவர்கள் நற்கதி அடைவார்கள் என்கிறது சாஸ்திரம்.

குறிப்பாக இயற்கைக்கு மாறாக இறந்துபோனவர்களின் ஆன்மா கடைத்தேற மகாளய அமாவாசை வழிபாடு மிகவும் உதவும். புரட்டாசி அமாவாசையில் செய்யும் தர்ப்பணம் அவர்களுக்குத் திருப்தி அளித்து கடைத்தேற உதவும்.

Readmore: அமாவாசை நாளில் நிகழும் சூரிய கிரகணம்!. ராசிக்கு ஏற்ப பலன்கள் என்ன?.

KOKILA

Next Post

பதிவு செய்யப்பட்ட அங்கீகரிக்கப்படாத 474 அரசியல் கட்சிகள் பட்டியலில் இருந்து நீக்கம்...! தேர்தல் ஆணையம் அறிவிப்பு...!

Sat Sep 20 , 2025
தேர்தல் ஆணையம் 474 பதிவு செய்யப்பட்ட அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகளை பட்டியலில் இருந்து நீக்கியுள்ளது. இது குறித்து தேர்தல் ஆணையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில்; 1951-ம் ஆண்டு மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் பிரிவு 29ஏ-ன் கீழ் தேர்தல் ஆணையத்தில் அரசியல் கட்சிகள் பதிவு செய்கின்றன. அவ்வாறு பதிவு செய்யப்பட்ட கட்சிகள் தொடர்ந்து 6 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடாவிட்டால் அவை பதிவு செய்யப்பட்ட கட்சிகளின் பட்டியலில் இருந்து நீக்கப்படும். இதன் படி மேற்கொள்ளப்பட்ட […]
Untitled design 5 6 jpg 1

You May Like