fbpx

காற்று மாசு..!! சர்க்கரை நோயால் பாதிக்கப்படும் அபாயம்..!! சென்னை மக்களே உஷார்..!!

சமீப காலமாக சென்னை மற்றும் டெல்லியில் காற்று மாசு அதிகரித்துள்ளது. உலக சுகாதார நிறுவனம் நிர்ணயித்த அளவை விட சென்னையில் காற்றின் தரம் மோசமாக உள்ளது. இந்த காற்று மாசு ஏற்படுவதால் மக்களுக்கு நீரிழிவு நோய் ஏற்படுவதாக ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளானர்.

காற்று மாசு காரணமாக சென்னை மற்றும் டெல்லியில் வசிப்பவர்களுக்கு “டைப் 2” நீரிழிவு நோய் ஏற்படும் என்று ஆராய்ச்சியாளர்கள் அதிர்ச்சி தகவலை கூறியுள்ளனர். மேலும், சர்வதேச பத்திரிகைகளில் வெளியான ஆய்வின் முடிவுகள் இந்த தகவலை வெளியிட்டுள்ளது. இந்நிலையில், ஆய்விற்கு சென்னையில் 6,722 பேரிடமும், டெல்லியில் 5,342 பேரிடமும் ரத்த மாதிரிகளை எடுத்து சோதனை செய்தனர்.

இந்த ஆய்வு 2010 – 2016, மொத்தம் 6 ஆண்டுகள் வரை இந்த சோதனை நடைபெற்றது. தெற்காசியாவின் கார்டியோ மெட்டபாலிக் ரிஸ்க் குறைப்பு மையம் இந்த ஆய்வை நடத்தியது. இந்த ஆய்வு முடிவின்படி, அவர்கள் காற்று மாசுபாட்டிற்கும், நீரிழிவு நோய்க்கும் தொடர்பு இருப்பதை கண்டறிந்துள்ளனர். மேலும், காற்று மாசு காரணமாக இளைஞர்களும் அதிக அளவில் நீரிழிவு நோயால் பாதிக்கப்படுவதும் தெரியவந்துள்ளது. இதுமட்டுமல்லாமல் காற்று மாசுபாட்டால் உயர் ரத்த அழுத்தம் ஏற்படும் என்றும் தெரியவந்துள்ளது.

Chella

Next Post

ஸ்டாலின் ஸ்டைலில் ராகுல் காந்தி!… திமுக அரசின் திட்டம் தெலுங்கானாவில் வாக்குறுதியாக!… என்னென்ன தெரியுமா?

Fri Nov 3 , 2023
தெலங்கானாவில் பெண்களுக்கு மாதம் 4 ஆயிரம் வழங்கப்படும் என காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி அறிவித்துள்ளார். தெலங்கானாவில் நவம்பர் 30-ம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடக்கிறது. முதல்வர் சந்திரசேகர ராவ் தலைமையிலான பாரத் ராஷ்ட்ரிய சமிதி கட்சிக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. இந்த தேர்தலில் வெற்றி பெற்றாக வேண்டும் என்ற நோக்குடன் இரு கட்சிகளும் பல்வேறு திட்டங்களை அறிவித்துள்ளன. இந்நிலையில், தெலங்கானா மாநிலம் […]

You May Like