உலக அல்சைமர் தினம் ஆண்டுதோறும் செப்டம்பர் 21 ஆம் தேதி கடைபிடிக்கப்படுகிறது. இந்த நாளைக் கொண்டாடுவதன் நோக்கம் மக்களிடையே அல்சைமர் பற்றிய விழிப்புணர்வைப் பரப்புவதாகும். அல்சைமர் என்ற பெயரைக் கேட்டாலே பெரும்பாலும் முதுமையில் மறதியால் ஏற்படும் ஒரு நோயை நினைவுக்குக் கொண்டுவருகிறது.
சிலநேரம் நம்மில் பலர் விளையாட்டுத்தனமாக சொல்வதுதான்… “எனக்கு எல்லாமே மறந்து போய்ட்டா ரொம்ப நல்லா இருக்கும்”. நாம் இதை நகைச்சுவையாக சொல்வோம் என்றாலும்கூட, உண்மையாகவே இதுபோன்ற மறதி நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் அவர்களின் குடும்பத்தினருக்கும் மட்டுமே மட்டுமே அதனால் ஏற்படும் இன்னல்கள் எவ்வளவு சிரமத்தை கொடுக்குமென்பது உணர்வுப்பூர்வமாக தெரியும். இதன் தீவிர பாதிப்புதான், அல்சைமர் எனும் ஞாபக மறதி.
நம் தாத்தா, பாட்டி போன்றவர்கள் “எனக்கு சுத்தமா ஞாபகமே இல்லப்பா, பெயர்களைக்கூட நினைவுல வச்குக்க முடியல” என்று கூறுவதில் தொடங்கி, கடைசியில் வீட்டில் இருந்து வெளியே சென்றால் மீண்டும் எப்படி வீட்டிற்கு வருவது என்ற வழியினை கூட மறந்து விடும் அபாயத்திற்கு இட்டுச்செல்கின்றது ஞாபக மறதி. இது தீவிரப்படுவதுதான் அல்சைமர் எனும் நோய். எளிமையாக சொல்ல வேண்டுமென்றால், ஓகே கண்மனி படத்தில், பவானி கதாபாத்திரத்துக்கு வருமே, அதுதான் அல்சைமர். இந்த அல்சைமர் பற்றி விரிவாக இங்கே பார்ப்போம்.
அல்சைமர் நோய் பாதித்தவர்களால் எதையும் ஞாபகம் வைத்துக்கொள்ள முடியாது. பழகிய முகங்களையேகூட மறந்துவிடுவார்கள். பிறரின் உதவியில்லாமல் தனியாக செயல்படவே முடியாது. குறிப்பிட்ட சில ஜீன்களில் ஏற்படும் மரபணு மாற்றம்தான் இந்தற்கான முக்கியக் காரணமாகக் கருதப்படுகிறது. அடிக்கடி தலையில் அடிபடுதல், கடும் மன அழுத்தம், சர்க்கரைநோய், உயர் ரத்த அழுத்தம் போன்றவற்றின் காரணமாகவும் இது ஏற்படலாம்.
பல நூறு கோடி நரம்பு செல்களால் ஆனதுதான் மனித முளை. இவை ஒன்றோடு ஒன்று தொடர்பு கொண்டு இருக்கின்றது. பிறக்கும்போது இருக்கும் நியூரான்களின் (Neurons) எண்ணிக்கை, வயதாக வயதாக படிப்படியாக குறைந்துகொண்டே வரும்.
இப்படி நியூரான்கள் குறைவதால், ஞாபக மறதி ஏற்படுவது என்பது இயல்பான ஒன்றுதான். அதுவே நியூரான்களின் எண்ணிக்கை அதிக அளவில் அழிய ஆரம்பிக்கும் போது அல்சைமர் என்னும் ஞாபக மறதி நோய் உருவாகலாம். அல்சைமர் எனப்படும் அறிவாற்றல் இழப்பு அல்லது ஞாபக மறதி நோய். இது மிகவும் பொதுவான ஒரு நோய் நிலையாக இருக்கிறது.
வயதானவர்கள் மட்டுமல்ல, குழந்தைகளும் அல்சைமர் நோயால் பாதிக்கப்படலாம் என்பதை அறிந்து நீங்கள் அதிர்ச்சியடையலாம். இது அரிதானது என்றாலும், இது சாத்தியமாகும். குழந்தைகளில் அல்சைமர் நோயின் அறிகுறிகளைப் பற்றி அறிந்துகொள்ளுங்கள்.
குழந்தை பருவ அல்சைமர் நோயின் அறிகுறிகள்: பேச்சில் தெளிவு இல்லாமை,
முழுமையான பேச்சு இழப்பு,
சுவாசிப்பதில் சிரமம்,
வயிற்று வீக்கம்,
வெளிறிய தோல் ,
கண் தொடர்பை ஏற்படுத்துவதில் சிரமம்,
கண்களால் ஒளி அல்லது பொருட்களைப் பார்ப்பதில் சிரமம்,
விழுங்குவதில் சிரமம்,
தசை கட்டுப்பாடு இல்லாமை,
மோட்டார் திறன்களை இழத்தல்,
வேகமாக சிமிட்டுதல்.
குழந்தை பருவ அல்சைமர் நோய்க்கான காரணங்கள் என்ன? குழந்தை பருவ டிமென்ஷியா என்பது நியூரானல் செராய்டு லிப்போஃபுசினோசிஸ் (NCL) எனப்படும் ஒரு நிலையால் ஏற்படுகிறது. ஒரு குழந்தைக்கு நியூரானல் செராய்டு லிப்போஃபுசினோசிஸ் இருக்கும்போது, லிப்பிடுகள் மற்றும் புரதங்கள் உடலில் சேரத் தொடங்குகின்றன. இது குழந்தையின் செயல்படும் திறனில் குறைவை ஏற்படுத்துகிறது. குழந்தைகளில் அல்சைமர் மரபணு காரணிகளால் ஏற்படுகிறது. பெற்றோர் இருவரும் நோயின் கேரியர்களாக இருக்கும்போது, குழந்தைக்கு அல்சைமர் உருவாகும் ஆபத்து அதிகரிக்கிறது. பாதிக்கப்பட்ட குழந்தையின் செல்களில் கொழுப்பு அல்லது சர்க்கரை குவிந்து, மூளை மற்றும் பிற உறுப்புகளின் செயல்பாட்டு திறனைக் குறைக்கிறது.
எவ்வாறு கண்டறியப்படுகிறது? குழந்தைகளில் அல்சைமர் நோய் கண்டறியப்படுவதற்கு அதிக நேரம் ஆகலாம். இந்த நோய் மிகவும் அரிதானது மற்றும் கண்டறிய பல ஆண்டுகள் ஆகலாம். பெற்றோருக்கு அறிகுறிகளை அடையாளம் காண முடியாமல் போகலாம். சமீப காலம் வரை, NPC அல்லது MPS III இருப்பதாக சந்தேகிக்கப்படும் குழந்தைகளுக்கு பயாப்ஸி தேவைப்பட்டது. இப்போது, குழந்தைகளில் அல்சைமர் நோயைக் கண்டறிய இரத்தப் பரிசோதனை பயன்படுத்தப்படுகிறது.
சிகிச்சை: குழந்தைப் பருவ அல்சைமர் நோய்க்கு எந்த சிகிச்சையும் இல்லை. ஒரு குழந்தைக்கு ஏதேனும் அறிகுறிகள் தென்பட்டால், அவர்களின் மருத்துவர் அவர்களுக்கு சிகிச்சையளிப்பார். சாப்பிடுவதில் உள்ள சிக்கல்கள், சமநிலை பிரச்சினைகள் மற்றும் தசை பலவீனம் ஆகியவற்றிற்கு, அவர்கள் ஒரு பேச்சு சிகிச்சையாளரை அணுகலாம் மற்றும் பிற தலையீடுகள் செய்யலாம்.
Readmore: அமேசான் முதல் ஆப்பிள் வரை!. அதிக H-1B விசாக்களை வழங்கும் டாப் 10 அமெரிக்க நிறுவனங்கள் இதோ!.