பிரதமர் நரேந்திர மோடி இன்று மாலை 5 மணிக்கு நாட்டு மக்களுக்கு உரையாற்ற உள்ளார். இந்த திடீர் அறிவிப்பு பல்வேறு ஊகங்களை கிளப்பியுள்ளது. பிரதமர் என்ன பேசுவார் என்பது குறித்த தகவல்களை அரசு வட்டாரங்கள் அதிகாரப்பூர்வமாக இதுவரை வெளியிடவில்லை. இதனால், இந்த உரை குறித்து தேசிய அளவில் கவனம் பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
நாளைய தினம் (செப்டம்பர் 22) ஜிஎஸ்டி 2.0 சீர்திருத்தங்கள் அமலுக்கு வர உள்ள நிலையில், இதுபற்றி பிரதமர் பேசுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்த சீர்திருத்தங்கள், வரி நடைமுறைகளை மேலும் எளிமையாக்கும் என்றும், நாட்டின் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, இது குறித்து பிரதமர் விளக்கமளிக்க வாய்ப்புள்ளது.
அதேபோல், அமெரிக்காவில் எச்1பி விசா வைத்திருப்பவர்கள் மீது அமெரிக்கா கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இது அமெரிக்காவில் பணியாற்றும் ஆயிரக்கணக்கான இந்திய தொழில்நுட்ப வல்லுநர்களை நேரடியாகப் பாதிக்கும். இந்த விவகாரம் குறித்து பிரதமர் முக்கிய அறிவிப்புகளை வெளியிடலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
Read More : ஷாக்கிங் ரிப்போர்ட்..!! 32 மருந்துகள் தரமற்றவை..!! மத்திய அரசின் அதிரடி சோதனையில் அம்பலம்..!!