சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் சிங்கப்பெண்ணே தொடர், ஒட்டுமொத்த சீரியல் ரசிகர்களையும் கவர்ந்த ஒரு தொடராக உள்ளது. சன், விஜய், ஜீ என மூன்று தொலைக்காட்சித் தொடர்களையும் சேர்த்து, டிஆர்பி ரேட்டிங்கில் சிங்கப்பெண் தான் முதலிடம்.
அன்பு மற்றும் மகேஷ் இருவரும் ஆனந்தியை காதலித்து வருகின்றனர். இவர்களில் ஆனந்தி, அன்புவை காதலிக்கிறார் என தெரிந்து கொண்ட மகேஷ் ஒதுங்கி போகிறார்.
இதில் மக்களை கவர்ந்த விஷயம் என்னவென்றால், ஒவ்வொருவரின் காதலுமே புனிதமானதாக இருப்பதுதான். ஆசைக்கு இடம்கொடுக்காமல், அன்பை மட்டும் மையமாகக் கொண்டே இவர்களின் காதல் நகர்கிறது.
இதனிடையே ஆனந்தி கர்ப்பமாக இருக்கும் விஷயம் அவரின் அக்கா திருமணத்தின் போது அனைவருக்கும் தெரிய வருகிறது. இது ஒரு புறம் சென்றுக் கொண்டிருக்கையில் யாருக்கு ஆனந்தி கர்ப்பம் தெரியக் கூடாது என பயந்தார்களோ, அதே போன்று ஆனந்தி கர்ப்பம் மகேஷிற்கு தெரியவந்து விட்டது. கடும் கோபமடைந்த மகேஷ் அன்புவை அடித்து மிரட்டியதுடன், ஆனந்தியுடன் மகேஷை பார்க்க வரும் பொழுது அன்புவை ஆட்கள் வைத்து கடத்துகிறார்,.
இந்த நிலையில் சிங்கப்பெண் சீரியலில் புது புரோமோ வெளியாகியுள்ளது. அன்பு மீது கடும் கோபத்தில் உள்ள மகேஷ் அன்புவை கடத்தி சென்று ஒரு இடத்தில் கட்டி வைத்து சித்ரவதை செய்து வருகிறார். ஆனால் அன்பு நான் எதுவுமே செய்யவில்லை என சொல்கிறார். ஆனந்தி போன் செய்தால் மகேஷ் தான் அன்புவை தேடுவதற்காக போலீஸ் கமிஷனரிடம் பேசி வருவதாக பொய் கூறுகிறார்.
அன்புவை தேட கமிஷ்னர் ஆபிசில் இருப்பதாக மகேஷ் சொன்ன நிலையில் அவர் மார்க்கெட்டில் இருந்து வெளியில் வருவதை ஆனந்தி பார்த்துவிடுகிறார். அதன் பின் அவரை பின்தொடர்ந்து சென்று அன்புவை அவர் கட்டி வைத்து இருக்கும் இடத்தை கண்டுபிடிக்கிறார். அன்புவை கட்டி வைத்து மகேஷ் சித்திரவதை செய்வதை பார்த்த ஆனந்தி கடும் அதிர்ச்சி அடைகிறார்.
Read more: Tn Govt: பேக்கரி பொருட்கள் தயாரிக்க 4 நாட்கள் தமிழக அரசு சார்பில் இலவச பயிற்சி வகுப்பு…!