நெருங்கிய ஆண் நண்பருடன் பிறந்தநாள் கொண்டாட்டம்..!! ஆட்டோ பின்னாடியே சென்ற கணவன்..!! குலைநடுங்க வைக்கும் சம்பவம்..!!

Crime 2025 6

மத்தியப் பிரதேச மாநிலம் குவாலியரில் கடந்த 2023ஆம் ஆண்டில் திருமணம் செய்துகொண்டவர்கள் அரவிந்த் – நந்தினி தம்பதி. இவர்களுக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில், நந்தினிக்கு அன்குஷ் பதக் என்ற இளைஞருடன் நட்பு உருவானது. அன்குஷின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் நந்தினி பங்கேற்ற வீடியோக்களை பார்த்து அரவிந்த் ஆத்திரமடைந்தார்.


மேலும், சமீபத்தில், நந்தினி தனது நண்பர்களுடன் ஆட்டோவில் சென்றபோது, அவர்களைப் பின்தொடர்ந்து சென்ற கணவர் அரவிந்த், அவர்களை வழிமறித்து வாக்குவாதம் செய்துள்ளார். அப்போது, யாரும் எதிர்பாராத வகையில், தான் வைத்திருந்த துப்பாக்கியால் நந்தினியை சுட்டார். இதில் படுகாயமடைந்த நந்தினி, மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். பின்னர், போலீசாரிடமிருந்து தப்பிக்க முயன்ற அரவிந்தை, மடக்கிப் பிடித்து கைது செய்தனர்.

விசாரணையில், இந்த பிரச்சனைக்குக் காரணம் நீண்டகால பகையே என்பது தெரியவந்துள்ளது. அரவிந்துக்கு ஏற்கனவே இன்னொரு மனைவியும், ஒரு குழந்தையும் இருந்துள்ளது. இதுபற்றி அறிந்த நந்தினி போலீசில் புகார் அளித்ததால், அரவிந்த் ஏற்கனவே ஒருமுறை காரை ஏற்றி நந்தினியை கொலை செய்ய முயற்சி செய்துள்ளார்.

பிறகு, சமீபத்தில் அரவிந்த் போலி வீடியோக்களை உருவாக்கி அவதூறு பரப்பியதால், நந்தினி தனது நண்பருடன் சென்று எஸ்.பி. அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். அங்கிருந்து வீடு திரும்பும் வழியிலேயே இந்த கொடூர சம்பவம் நிகழ்ந்துள்ளது. இந்தச் சம்பவம், திருமண உறவில் ஏற்படும் தவறான புரிதல்கள் மற்றும் சந்தேகங்கள் எவ்வாறு கொடூரமான விளைவுகளுக்கு வழிவகுக்கின்றன என்பதை உணர்த்துவதாக நெட்டிசன்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Read More : பொதுத்துறை வங்கியில் கொட்டிக் கிடக்கும் வேலை..!! மாதம் ரூ.1.40 லட்சம் சம்பளம்..!! விண்ணப்பிக்க மறந்துறாதீங்க..!!

CHELLA

Next Post

வெளிநாட்டு பயணியிடம் சரளமாக பிரெஞ்சு மொழியில் பேசிய இந்திய ஆட்டோ ஓட்டுநர்; வியந்து பாராட்டிய நெட்டிசன்கள் ! Viral video!

Mon Sep 22 , 2025
இந்திய ஆட்டோ ரிக்‌ஷா ஓட்டுநர் ஒருவர் வெளிநாட்டு சுற்றுலாப் பயணி ஒருவருடன் பிரெஞ்சு மொழியில் சரளமாகப் பேசும் வீடியோ வைரலாகி வருகிறது.. இதனால் அந்த ஓட்டுநர் இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். சமூக ஊடகங்களில் பரவலாகப் பகிரப்பட்ட இந்த வீடியோ, ஓட்டுநரின் எதிர்பாராத மொழித் திறன்கள் மற்றும் பார்வையாளர்களை வீட்டில் இருப்பது போல் உணர வைக்கும் அவரது திறனைக் கண்டு நெட்டிசன்களை ஈர்க்கிறது. இந்த வீடியோவை சுற்றுலாப் பயணி தனது இன்ஸ்டாகிராம் […]
viral video auto driver

You May Like