ஜீ தமிழ் தொலைக்காட்சி பிரம்மாண்ட ரியாலிட்டி ஷோக்களையும், வித்தியாசமான கதைக்களத்தை கொண்ட தொடர்களையும் ஒளிபரப்பி வருகிறார்கள். அந்த வகையில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் 8.30 மணிக்கு ‘அயலி’ என்ற புதிய மெகா தொடர் ஒளிபரப்பாகிறது. இதில் நாயகியாக தேஜஸ்வினி நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக, ‘நினைத்தாலே இனிக்கும்’ தொடர் நாயகன் ஆனந்த் செல்வன் நடிக்கிறார். மேலும் பலர் நடிக்கின்றனர்.
அம்மாவை இழந்த அயலி, தனது சித்தியால் வேலைக்காரி போல் வீட்டில் நடத்தப்படுகிறாள். தனது அம்மா சொன்ன வார்த்தைக்காக குடும்பத்தைப் பெரிதாக மதிக்கிறார். அவர் குடும்பத்துக்குத் தெரியாமல் ரகசிய போலீஸாகவும் இருக்கிறார். அவரின் இந்த முகம் வீட்டுக்குத் தெரிய வருகிறதா? குடும்பம் அயலியின் அன்பைப் புரிந்து கொள்கிறதா? தன் அம்மா மீது விழுந்த பழியை அயலி போக்குகிறாரா? என்பது கதை.
ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வந்த அயலி சீரியலில் நடிப்பதற்காக ஒரு நாளைக்கு நடிகர் நடிகைகள் வாங்கும் சம்பளம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. இதில் அயலி கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் தான் தேஜஸ்வினி கவுடா இவர் இந்த சீரியலில் நடிக்க ஒரு நாளைக்கு 25 ஆயிரம் சம்பளம் வாங்கி வருகிறார். அதே சீரியலில் அமிர்தாவாக நடித்து வருபவருக்கு 6 ஆயிரம் ரூபாயும், இந்திராவாக நடித்து வருபவருக்கு இந்திரா 20 ஆயிரம் ரூபாயும் சம்பளமாக கொடுக்கப்படுகிறது.