திருவிழாவிற்கு சென்ற சிறுமி கூட்டு பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நாட்டில் கடந்த சில நாட்களாகவே குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள கோட்டா பகுதியில் 17 வயது சிறுமி தனது குடும்பத்தாருடன் வசித்து வருகிறார். இந்த நிலையில் திருவிழாவில் கலந்து கொள்ள சிறுமி நேற்று முன் தினம் தன் பாட்டி வீட்டிற்கு சென்றுள்ளார்.
அப்போது அங்கு வந்திருந்த ஒருவர் சிறுமியுடன் பேசி நன்றாக பேசி பழகியுள்ளார். அந்த நபர் சிறுமியிடன் பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்ட நிலையில் பின்னர் ஒரு ஆள் நடமாட்டம் இல்லாத இடத்திற்கு அழைத்து சென்றார். அங்கு ஏற்கனவே அந்த நபரின் மூன்று நண்பர்கள் இருந்த நிலையில் நான்கு பேரும் சேர்ந்து சிறுமியை மாறிமாறி கூட்டு பாலியல் பலாத்காரம் செய்தனர்.
பின்னர் அங்கிருந்து குற்றவாளிகள் தப்பி சென்ற நிலையில், சிறுமி தனக்கு நேர்ந்த கொடுமைகள் குறித்து குடும்பத்தினரிடம் கூறி கதறி அழுதார். இது தொடர்பாக அவர்கள் காவல் நிலையத்தில் புகார் கொடுத்த நிலையில் போலீசார் வழக்கு பதிவு செய்து குற்றவாளிகள் நான்கு பேரையும் கைது செய்தனர். மேலும் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.