திருச்சி திருவெறும்பூர் அருகேபாதாள சாக்கடையில் தூய்மைப் பணியில் ஈடுபட்ட 2 தொழிலாளர்கள் விஷவாயு தாக்கி உயிரிழந்தனர்..
திருச்சி திருவெறும்பூர் அருகே உள்ள கார்மல் கார்டன் பகுதியில் உள்ள பாதாள சாக்கடை தூய்மை பணியில் ரவி, பிரபு ஆகிய துப்புரவு பணியாளர்கள் ஈடுபட்டிருந்தனர்.. அப்போது விஷ வாயு தாக்கியதில் ரவி, பிரபு ஆகியோர் மயக்கமடைந்த நிலையில் குழிக்குள் விழுந்தனர்.. இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்த தகவலறிந்து அங்கு விரைந்த தீயணைப்புத்துறையினர் அங்கு உயிரிழந்தவர்களின் உடல்களை சுமார் 1 மணி நேரம் போராடி மீட்டனர்.. இதையடுத்து காவல்துறையினர் இருவரின் உடல்களையும் திருச்சி அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.. இவர்கள் எந்த ஊரை சேர்ந்தவர்கள், இருவர் மட்டும் தான் துப்புரவு பணியில் ஈடுபட்டார்களா என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.. துப்புரவு பணியில் ஈடுபட்ட இருவர் விஷவாயு தாக்கியதில் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது..



