இளநீர், உடலுக்கு நீரேற்றத்தையும், புத்துணர்வையும் தரும் ஓர் அற்புதமான பானம். இது உடலை நச்சு நீக்கவும், செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தவும் உதவுகிறது. இத்தகைய ஊட்டச்சத்து நிறைந்த இளநீரின் பலன்களை அதிகரிக்க, அதனுடன் சில பொருட்களை சேர்த்து அருந்தலாம்.
தேன் : இளநீரில் தேன் சேர்த்து அருந்துவது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். தேனில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் நொதிகள், உடலில் தொற்று நோய்களை எதிர்த்துப் போராட உதவுகின்றன. மேலும், தேனில் உள்ள இயற்கை சர்க்கரை, உடலுக்கு உடனடியாக ஆற்றலை அளிக்கும்.
சியா விதைகள் : நார்ச்சத்து, ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்த சியா விதைகள், இளநீருடன் சேரும்போது ஊட்டச்சத்து மேலும் அதிகரிக்கும். இது வயிறை நீண்ட நேரம் நிறைவாக வைத்திருக்க உதவும். மேலும், இளநீரில் உள்ள பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம் போன்ற எலக்ட்ரோலைட்களுடன் சியா விதைகள் சேரும்போது, அது உடலை நீண்ட நேரம் நீரேற்றமாக வைத்திருக்கப் பெரிதும் உதவும்.
கருப்பு உப்பு : இதில் சோடியம் மற்றும் பல தாதுக்கள் நிறைந்துள்ளன. இதனை இளநீருடன் சேர்த்து அருந்துவது, செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்தி, வளர்சிதை மாற்றத்தை சீராக்கும்.
எலுமிச்சை சாறு : வைட்டமின் சி நிறைந்த எலுமிச்சை சாறு, உடலை நீரேற்றமாக வைத்திருக்க உதவுகிறது. இளநீரில் எலுமிச்சை சாறு கலந்து குடிப்பது, உடலில் pH அளவைச் சமநிலைப்படுத்துவதோடு, ரத்த ஓட்டத்தை மேம்படுத்தும். மேலும், எலுமிச்சையில் உள்ள சிட்ரிக் அமிலம் சிறுநீரக கற்கள் உருவாவதை தடுக்கவும், ரத்த சோகைக்கு எதிராகவும் செயல்படும்.
புதினா : இளநீர் மற்றும் புதினா இலைகள் கலவை, உடலுக்குப் புத்துணர்ச்சியையும், குளிர்ச்சியையும் அளிக்கிறது. மேலு, உடலை நச்சு நீக்கவும் உதவும். புதினாவில் உள்ள பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் வைரஸ் எதிர்ப்பு பண்புகள், இளநீருடன் சேரும்போது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.
Read More : என்ன பண்ணாலும் இந்த ராசிக்காரர்களுக்கு லேட்டா தான் திருமணம் நடக்கும்..!! புட்டு வைத்த ஜோதிடம்..!!