கடந்த 8 ஆண்டுகளாக சிமெண்ட் மீதான ஜிஎஸ்டி வரியால் கட்டுமானத் துறை கடுமையான பாதிப்புகளைச் சந்தித்து வந்தது. அதன்படி, 28% ஆக இருந்த இந்த வரி, ஜிஎஸ்டி 2.0 அறிவிப்பின்படி தற்போது 18% ஆக குறைக்கப்பட்டுள்ளது. பல ஆண்டுகளாகக் கோரிக்கை விடுத்தும் நிறைவேறாத இந்த வரிக்குறைப்பு, கால தாமதமாக வந்தாலும், கட்டுமானத் துறையினர் மற்றும் வீடு கட்டும் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
குறைந்த சிமெண்ட் விலை : ஜிஎஸ்டி வரி குறைப்பால், சிமெண்ட் மூட்டையின் விலை கணிசமாக குறைந்துள்ளது. முன்பு ரூ.330-க்கு விற்கப்பட்ட ஒரு மூட்டை சிமெண்ட், தற்போது ரூ.30 குறைந்து, ரூ.300-க்கு விற்கப்படுகிறது. இது கட்டுமானத் துறையினருக்குப் பெரிய நிம்மதியை அளித்துள்ளது.
ஜிஎஸ்டி வருவதற்கு முன்பு, சிமெண்டிற்கு 12.5% வாட் வரி மட்டுமே விதிக்கப்பட்டது. ஆனால், ஜிஎஸ்டி வந்த பிறகு அது 28% ஆக உயர்ந்தது. இந்த விலை உயர்வால் பலர் வீடு கட்டும் முடிவை தள்ளிப்போட்டனர். இப்போது விலை குறைந்துள்ளதால், கட்டுமானம் மற்றும் வீடு கட்டும் பணிகள் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த வரிக்குறைப்புக்கு காரணமாக இருந்த மத்திய, மாநில அரசுகளுக்கு, கட்டுமானத் துறையினர் நன்றியை தெரிவித்துள்ளனர். எதிர்காலத்தில் வரி மேலும் உயர்த்தப்படக்கூடாது என்றும், இதே நிலை தொடர வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
Read More : தமிழ்நாட்டில் அடுத்தடுத்து நரபலி..? பீதியில் உறைந்து போன மக்கள்..!! கோவை, நாமக்கல்லில் பெரும் பரபரப்பு..!!