fbpx

நாடு முழுவதும் நவம்பர் 30-ம் தேதி வரை… ஓய்வூதியம் பெறும் நபர்களுக்கு மத்திய அரசு செம அறிவிப்பு…!

நாடு தழுவிய டிஜிட்டல் வாழ்க்கை சான்றிதழ் இயக்கம் 2.0 இந்தியாவின் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 100 நகரங்களில் 500 இடங்களில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மத்திய அரசு ஓய்வூதியதாரர்களின் ‘வாழ்க்கையை எளிதாக்கும் வகையில்’ ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியர் நலத்துறை டிஜிட்டல் வாழ்க்கைச் சான்றிதழை (டி.எல்.சி) அதாவது ஜீவன் பிரமாணைப் பரவலாக ஊக்குவித்து வருகிறது. 2014-ம் ஆண்டில், பயோமெட்ரிக் கருவிகளைப் பயன்படுத்தி டி.எல்.சி.களை சமர்ப்பிக்கும் பணி தொடங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, ஆதார் தரவுத்தளத்தை அடிப்படையாகக் கொண்ட முக அங்கீகாரத் தொழில்நுட்ப அமைப்பை உருவாக்குவதில் இத்துறை ஈடுபட்டது. இதன் மூலம் ஆண்ட்ராய்டு அடிப்படையிலான எந்தத் திறனறி செல்பேசியிலிருந்தும் எல்.சி.யை சமர்ப்பிக்க முடியும்.

இந்த வசதியின்படி, முக அங்கீகார நுட்பம் மூலம் ஒரு நபரின் அடையாளம் நிறுவப்பட்டு டி.எல்.சி உருவாக்கப்படுகிறது. நவம்பர் 2021-ல் தொடங்கப்பட்ட இந்தத் தொழில்நுட்பம், ஓய்வூதியதாரர்கள் வெளிப்புற பயோ-மெட்ரிக் சாதனங்களை சார்ந்திருப்பதைக் குறைத்ததுடன் பொதுமக்கள் மிகவும் அணுகக்கூடியதாகவும் மலிவானதாகவும் ஆக்கியது.டிஜிட்டல் வாழ்க்கைச் சான்றிதழை சமர்ப்பிக்க டி.எல்.சி / முக அங்கீகார தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதற்காக அனைத்து மத்திய அரசு ஓய்வூதியதாரர்கள் மற்றும் ஓய்வூதியம் வழங்கும் அதிகாரிகளிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில், இத்துறை 2022 நவம்பர் மாதத்தில் நாடு முழுவதும் 37 நகரங்களில் ஒரு இயக்கத்தைத் தொடங்கியது.

35 லட்சத்துக்கும் அதிகமான மத்திய அரசு ஓய்வூதியர்களுக்கான டி.எல்.சி.க்கள் வெளியிடப்பட்டு இந்த இயக்கம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. 17 ஓய்வூதியம் வழங்கும் வங்கிகள், அமைச்சகங்கள் / துறைகள், ஓய்வூதியர்கள் நலச் சங்கம் ஆகியவற்றின் ஒத்துழைப்புடன் 50 லட்சம் ஓய்வூதியதாரர்களை இலக்காகக் கொண்டு 2023 நவம்பர் 30 வரை நாடு தழுவிய இயக்கம் 100 நகரங்களில் 500 இடங்களில் நடத்தப்படுகிறது.

Vignesh

Next Post

அமைச்சர் செந்தில் பாலாஜி ரிலீஸ் ஆக வாய்ப்பே இல்லையா..? நீதிமன்றம் பரபரப்பு உத்தரவு..!!

Tue Nov 7 , 2023
அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் வரும் 22ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த வழக்கில் ஜாமீன் கேட்ட அமைச்சர் செந்தில் பாலாஜியின் மனுவை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் நிராகரித்தது. அதேநேரத்தில் அவரது நீதிமன்ற காவலை நீட்டித்துக் கொண்டே வந்தது. இதையடுத்து, செந்தில் பாலாஜி சென்னை ஐகோர்ட்டில் ஜாமீன் மனுத் தாக்கல் செய்தார். இந்த மனுவை […]

You May Like