fbpx

அமைச்சர் செந்தில் பாலாஜி ரிலீஸ் ஆக வாய்ப்பே இல்லையா..? நீதிமன்றம் பரபரப்பு உத்தரவு..!!

அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் வரும் 22ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த வழக்கில் ஜாமீன் கேட்ட அமைச்சர் செந்தில் பாலாஜியின் மனுவை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் நிராகரித்தது. அதேநேரத்தில் அவரது நீதிமன்ற காவலை நீட்டித்துக் கொண்டே வந்தது. இதையடுத்து, செந்தில் பாலாஜி சென்னை ஐகோர்ட்டில் ஜாமீன் மனுத் தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜெயச்சந்திரன், மருத்துவ காரணங்களை காட்டியும், சாட்சிகளை கலைக்கும் வாய்ப்பும் உள்ளதாக கூறி ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தார்.

இதையடுத்து, ஜாமீன் கேட்டு உச்சநீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி மேல்முறையீடு செய்தார். இந்த மனு மீதான விசாரணையை வரும் 6ஆம் தேதிக்கு உச்சநீதிமன்றம் ஒத்திவைத்தது. அமைச்சர் செந்தில் பாலாஜியின் காவல் இன்றுடன் முடிவடைந்தது. இதையடுத்து, காணொலி காட்சி மூலம் ஆஜர்படுத்தப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜியின் காவலை வரும் 22ஆம் தேதி வரை நீட்டித்து நீதிபதி அல்லி உத்தரவிட்டார்.

மேலும், நீதிமன்றத்தில் தாக்கல் செய்யாமல் அமலாக்கத்துறை கட்டுப்பாட்டில் உள்ள ஆவணங்களை வழங்க கோரி அமைச்சர் செந்தில் பாலாஜி தரப்பில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இது குறித்து பதிலளிக்க அமலாக்கத்துறைக்கு நீதிபதி உத்தரவிட்டார். அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 10-வது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Chella

Next Post

காற்று மாசுபாடு புற்றுநோயை உண்டாக்கும்!… எய்ம்ஸ் மருத்துவர் அதிர்ச்சி தகவல்! டெல்லி மக்கள் நச்சுக் காற்றை சுவாசிக்கின்றனர்!…

Tue Nov 7 , 2023
தலைநகர் டெல்லியில் உள்ள ‘கடுமையான’ காற்று மாசு மக்களின் ஆரோக்கியத்தில் குறிப்பிடத்தக்க தாக்கங்களை ஏற்படுத்தி வருகின்றன. மிக மோசமான காற்று மாசுபாடு காரணமாக மாநிலத்தில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதித்துள்ளன. நகரின் நிலவும் நச்சு காற்றின் தாக்கத்தைக் குறைக்க நகரவாசிகள் நடவடிக்கை எடுக்குமாறு நிபுணர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர். அகில இந்திய மருத்துவ அறிவியல் கழகத்தின் (AIIMS) மருத்துவர் பியூஷ் ரஞ்சன் கருத்துப்படி, வெளிப்புற காற்று மாசுபாட்டின் வெளிப்பாடு மனிதர்களுக்கு புற்றுநோயை ஏற்படுத்தும் […]

You May Like