Breaking : இன்றும் புதிய உச்சம்.. ரூ84,000ஐ தொட்ட தங்கம் விலை.. 2 நாட்களில் ரூ.1600க்கு மேல் உயர்வு.. பேரதிர்ச்சியில் நகைப்பிரியர்கள்!

gold new

சென்னையில் இன்று தங்கம் விலை ஒரு சவரனுக்கு ரூ. 560 உயர்ந்து ரூ. 84,000க்கு விற்பனை செய்யப்படுகிறது.

2025 ஆம் ஆண்டில் தங்கம் விலை தொடர்ச்சியாக உயர்ந்து வருகிறது. சர்வதேச பொருளாதார மந்த நிலை, அமெரிக்க டாலர் மதிப்பு சரிவு, வட்டி விகிதக் குறைவு, பணவீக்கம் அதிகரிப்பு ஆகியவை காரணமாக உலகளாவிய முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடாக தங்கத்தை கருதுகின்றனர்.. மேலும் இந்தியாவில் திருமணம் மற்றும் பண்டிகை சீசன் காரணமாகவும் தங்கத்தின் தேவை உயர்ந்துள்ளது.


கிட்டத்தட்ட 15 நாட்களாகவே தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வந்தது.. அதன்படி கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது.. அந்த வகையில், சென்னையில் கடந்த வாரத்தின் தொடக்கத்தில் தங்கம் விலை புதிய உச்சத்தை தொட்டு, சவரன் ரூ.82,000ஐ கடந்து விற்பனையானது. எனினும் பின்னர் தங்கம் விலை சற்று குறைந்தது.. வார இறுதியில் மீண்டும் தங்கம் விலை உயரத் தொடங்கியது..

அந்த வகையில் நேற்று ஒரே நாளில் 2 முறை உயர்ந்தது தங்கம் விலை.. காலை ரூ.560, மாலையில் ரூ.560 என ஒரே நாளில் மொத்தம் ரூ.1120 உயர்ந்ததால் நகைப்பிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்..

இந்த நிலையில் சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்றும் உயர்ந்துள்ளது. அதன்படி ஒரு கிராமுக்கு ரூ.70 உயர்ந்து ரூ.10,500க்கு விற்பனையானது.. இதனால் ஒரு சவரனுக்கு ரூ. 560 உயர்ந்து ரூ. 84,000க்கு விற்பனை செய்யப்படுகிறது.. அதே போல் இன்று வெள்ளியின் விலையும் உயர்ந்தது… ஒரு கிராம் வெள்ளி ரூ. 1 உயர்ந்து ரூ.149க்கு விற்பனை செய்யப்படுகிறது.. இதனால் ஒரு கிலோ ரூ.1,49,000க்கு விற்பனையாகிறது. தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து புதிய உச்சத்தை தொட்டு வருவதால் நகைப்பிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்..

Read More : அதிரடியாக குறைந்தது பைக், ஸ்கூட்டர் விலைகள்..!! இதுதான் சரியான நேரம்..!! வாடிக்கையாளர்களே மிஸ் பண்ணிடாதீங்க..!!

English Summary

In Chennai today, the price of gold per sovereign increased by Rs. 560 and is being sold at Rs. 84,000.

RUPA

Next Post

அனைத்து மார்பு வலிகளுக்கும் வாயுத் தொல்லைகள் மட்டுமே காரணம் இல்ல; அவற்றைப் புறக்கணிப்பது ஆபத்தானது!

Tue Sep 23 , 2025
Doctors warn that chest pain should never be ignored as a sign of gas.
Gastric Trouble in the Chest

You May Like