உத்தரப்பிரதேச மாநிலம் ராம்பூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் நூர்பால். இவர் தனது 40 வயதான ரஞ்சனி (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற மனைவியுடன் வாழ்ந்து வந்தார். இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் தான், ரஞ்சனிக்கும் அவரது மைத்துனர் மகனான பிரம்மா ஸ்வரூப் என்பவருக்கும் இடையே நெருக்கம் ஏற்பட்டுள்ளது.
ஆனால், பிரம்மா ஸ்வரூப், ரஞ்சனியை விட 5 வயது குறைவானவர். இருப்பினும் இவர்களது உறவு நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. கணவர் நூர்பால் ஓட்டுநர் என்பதால், அவர் அடிக்கடி வேலைக்கு வெளியே சென்றுவிடுவார். அந்த சமயத்தில் ரஞ்சனியும் பிரம்மாவும் வீட்டில் உல்லாசமாக இருந்து வந்துள்ளனர்.
இந்த சம்பவம் கிராமத்தில் காட்டுத்தீயாகப் பரவிய நிலையில், கணவர் நூர்பாலுக்கும் இந்த விஷயம் தெரியவந்தது. இதனால், அதிர்ச்சியடைந்த அவர், தனது மனைவி ரஞ்சனியிடம் இதுகுறித்து விசாரித்துள்ளார். அப்போது, பிரம்மாவுக்கு தனக்கு 3 ஆண்டுகளாக திருமணத்தை மீறிய உறவு இருந்ததாக ரஞ்சனி ஒப்புக்கொண்டார். ஆனாலும் நூர்பால் கண்டித்த போதும், ரஞ்சனி சிறிதும் கவலைப்படாமல், பிரம்மாவுடன் தான் தான் வாழ்வேன் என்று பிடிவாதமாக இருந்துள்ளார்.
ஒரு கட்டத்தில், இந்த விவகாரம் இரு குடும்பத்தினருக்கும் இடையே பூகரமாக வெடித்தது. இந்நிலையில், பிரம்மா ஸ்வரூப் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாகவும், 3 ஆண்டுகளாக துன்புறுத்தியதாகவும் ரஞ்சனி, ஷஹாபாத் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து, போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
இதற்கிடையே, மருமகன் பிரம்மாவுடன் காவல் நிலையம் வந்த ரஞ்சனி, தான் கொடுத்த வழக்கை வாபஸ் பெறுவதாகவும், பிரம்மாவையே திருமணம் செய்து கொள்ள இருப்பதாகவும் கூறினார். பின்னர், அங்கேயே இருவரும் மாலையை மாற்றிக் கொண்டனர். மேலும், இந்த திருமணத்துக்கு இரு வீட்டாரும் சம்மதம் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இச்சம்பவம் தான் தற்போது அங்கு ஹாட் டாப்பிக்காக இருக்கிறது.



