பதிவு விலக்குகளைப் பயன்படுத்தி வரி செலுத்தாமல் உயர் ரக வாகனங்களை இறக்குமதி செய்யும் மோசடிகளை அம்பலப்படுத்தும் நோக்கில் நாடு தழுவிய அளவில் ஆபரேஷன் நம்கூர் என்ற பெயரில் சோதனை நடந்து வருகிறது.. கேரளா மற்றும் லட்சத்தீவு சுங்க ஆணையரகத்தின் தலைமையில் நடத்தப்பட்ட விசாரணையில், மாநிலம் முழுவதும் கிட்டத்தட்ட 30 இடங்களில் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த நடவடிக்கையின் ஒரு பகுதியாக, பனம்பிள்ளி நகரில் உள்ள துல்கர் சல்மானின் வீடு, தேவாராவில் உள்ள பிருத்விராஜ் சுகுமாரன் மற்றும் எலம்குளத்தில் உள்ள மம்முட்டி ஆகியோரின் வீடுகளில் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
அப்போது பூட்டான் வழியாக இந்தியாவிற்குள் கொண்டு வரப்பட்ட சொகுசு வாகனங்கள் கொண்டு வரப்பட்டது தெரியவந்துள்ளது.. இதையடுத்து நடிகரும் தயாரிப்பாளருமான துல்கர் சல்மான் பெயரில் பதிவு செய்யப்பட்ட லேண்ட் ரோவர் டிஃபென்டர் உட்பட 2 சொகுசு கார்களை சுங்க அதிகாரிகள் இன்று பறிமுதல் செய்தனர்.
கார்கள் தொடர்பான தேவையான ஆவணங்களை சமர்ப்பிக்குமாறு கேட்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பறிமுதல் செய்யப்பட்ட கார்களின் ஆவணங்களை சரிபார்ப்பதைப் பொறுத்து இந்த வழக்கில் அடுத்தகட்ட நடவடிக்கை இருக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
லோகா அத்தியாயம் 1 படத்தின் சாதனை வெற்றியைத் தொடர்ந்து துல்கர் தற்போது கவனத்தை ஈர்த்து வருகிறார்.. இது அதிக வசூல் செய்த மலையாளத் திரைப்படமாகும், மேலும் தனது வேஃபேரர் பிலிம்ஸ் பேனரின் கீழ் இந்த படத்தை துல்கர் தயாரித்திருந்தார். மேலும் இந்த படத்தில் கேமியோ ரோலில் அவர் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Read More : இந்த நகரில் 2 இன்ச்-க்கு மேல் ஹீல்ஸ் அணிய தடை.. அதற்கு அரசாங்கத்தின் அதிகாரப்பூர்வ அனுமதி தேவை..!