3 தேசிய விருதுகளை பெற்ற பார்க்கிங் படக்குழு.. சிறந்த துணை நடிகருக்கான விருதை பெற்றார் எம்.எஸ். பாஸ்கர்..

parking

இந்தியாவில் சிறந்த திரைப்படங்கள், சிறந்த நடிகர்கள், நடிகைகளுக்கு 1954-ம் ஆண்டு முதல் தேசிய விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது.. சிறந்த இயக்குனர், சிறந்த ஓலிப்பதிவு, சிறந்த ஒலி வடிவமைப்பு, சிறந்த நடிகர், சிறந்த இசை போன்ற பல துறைகளுக்கு தேசிய விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது.


அந்த வகையில் 2023-ம் ஆண்டிற்கான தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா இன்று டெல்லியில் நடைபெற்றது.. தேசிய விருதுக்கு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு குடியரசு தலைவர் திரௌபதி முர்மு விருதுகளை வழங்கி வருகிறார்..

அந்த வகையில் சிறந்த தமிழ் படம் மற்றும் சிறந்த திரைக்கதை ஆசிரியருக்கான விருதுகளை பார்க்கிங் படம் வென்றது.. மேலும் பார்க்கிங் படத்த்ல் நடித்த எம்.எஸ். பாஸ்கர் சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருதை வென்றார்.. இந்த நிலையில் பார்க்கிங் தயாரிப்பாளர் சினிஷ், இயக்குனர் ராம்குமார் பால கிருஷ்ணன், எம்.எஸ். பாஸ்கர் ஆகியோர் தேசிய விருதுகளை பெற்றனர்..

Read More : மற்றவர்களின் மனதை பிணமாக்கி அதை கொத்தித் தின்னும் கேவலப் பிறவியாக வாழ வேண்டுமா? நடிகர் பார்த்திபன் காட்டம்.. என்ன விஷயம்?

RUPA

Next Post

இந்தியாவின் மிக உயர்ந்த அங்கீகாரம்..! தாதாசாகேப் பால்கே விருது பெற்ற மோகன்லால்; அரங்கம் அதிர எழுந்து நின்று கை தட்டிய பிரபலங்கள்!

Tue Sep 23 , 2025
டெல்லியில் நடைபெற்ற 71வது தேசிய திரைப்பட விருது வழங்கும் விழா, மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லாலுக்கு இந்தியாவின் மிக உயர்ந்த சினிமா அங்கீகாரமான தாதாசாகேப் பால்கே விருது வழங்கப்பட்டது.. விஞ்ஞான் பவனில் நடைபெற்ற விழாவில், ஜனாதிபதி திரௌபதி முர்மு கலந்து கொண்டு, மூத்த நடிகர் மோகன்லாலுக்கு தாதாசாகே விருதை நேரில் வழங்கினார். மோகன்லால் மேடைக்கு நடந்து சென்றதும், அரங்கம் கை தட்டல்களால் அதிர்ந்தது. விருதைப் பெறும்போது அவரது அமைதியான, கண்ணியமான […]
mohanlal 1

You May Like