ஜீ தமிழ் தொலைக்காட்சி பிரம்மாண்ட ரியாலிட்டி ஷோக்களையும், வித்தியாசமான கதைக்களத்தை கொண்ட தொடர்களையும் ஒளிபரப்பி வருகிறார்கள். அந்த வகையில் துர்கா சரவணன் இயக்கத்தில் கடந்த மே 2023ம் ஆண்டு தொடங்கப்பட்ட ஒரு தொடர் தான் அண்ணா. திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 8 மணிக்கு அண்ணா சீரியல் ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது.
நேற்றைய எபிசோடில் சண்முகம், கௌதமின் நண்பர்களை விசாரித்து உண்மையை வர வைத்துவிடுகிறான். இதைடுத்து, வைஜெயந்தி அடுத்து நீ, துரையை தான் விசாரிக்கணும்.. ஆனால், அவனை நான் வெளியே விட மாட்டேன். ஜெயிலில் வைத்து அவனை கொன்னுடுவேன். அவன், தங்கச்சி மாலதியை கொன்னதும் நான் தான் என்று சொல்கிறாள். இதை மறைத்து வைக்கப்பட்டு இருக்கும் துரை கேட்டு அதிர்ச்சி அடைகிறான்.
இடைவேளைக்கு பிறகு கோர்ட் மீண்டும் கூடுகிறது, சண்முகம் அடுத்ததாக துரையை விசாரிக்க வேண்டும் என்று சொல்ல ஜெயிலில் இருப்பவனை எப்படி விசாரிக்க முடியும், அதற்கான முன் அனுமதி வேண்டும் என என்று வழக்கறிஞர் கூறுகிறார். ஆனால், சண்முகம் அதற்கான முறையான அனுமதி வாங்கி இருப்பதாக சொல்லி துரையை அழைத்து கூண்டில் ஏற்றுகிறான்.
துரையை பார்த்த வைஜெயந்தி அதிர்ச்சி அடைகிறாள். சண்முகம், துரையை விசாரிக்க தொடங்கினான். நீதிபதி முன்னிலையில் கௌதம் ஒரு கொலை செய்தான். அதற்கான பழியை நான் ஏற்று கொண்டேன். அதற்காக என் தங்கச்சிக்கு டீச்சர் வேலை வாங்கி கொடுத்து எனக்கு 20 லட்சம் ரூபாய் பணத்தை கொடுத்தாங்க என்ற உண்மைகளை உடைக்கிறான்.
இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த வைஜெயந்தி செய்வதறியாது திணறுகிறாள். கௌதம் செய்த குற்றத்திற்காக அவனுக்கும் அவனது நண்பர்களுக்கும் நீதிமன்றம் தண்டனையை அறிவிக்க கௌதம் அங்கிருந்து தப்பிக்க முயற்சி செய்கிறான். அடுத்து என்ன நடக்க போகிறது என்பதை பொறுத்திருந்தே பார்க்கலாம்.
Read more: நவராத்திரி 3ம் நாள் பூஜை!. திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி கிடைக்க சந்திரகாண்டா வழிபாடு!.