Flash : குட்நியூஸ்.. 2 நாட்களாக ஆட்டம் காட்டிய தங்கம் விலை இன்று குறைந்தது.. நகைப்பிரியர்கள் நிம்மதி!

Gold jewels new

சென்னையில் கடந்த 2 நாட்களாக உயர்ந்து வந்த தங்கம் விலை இன்று சற்று குறைந்துள்ளது..

ரஷ்யா – உக்ரைன் மோதல், மத்திய கிழக்கில் நிலவும் பதற்றம், ட்ரம்பின் சில அதிரடி நடவடிக்கைகள் உள்ளிட்ட பல காரணங்களால் சர்வதேச அளவில் பொருளாதார ஸ்திரத்தனமை இல்லை.. இதனால் முதலீட்டாளர்கள் பாதுகாப்பு கருதி பலரும் தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர். எனவே தங்கம் என்பது தற்போது சாமானிய மக்களுக்கு எட்டாக் கனியாக மாறி உள்ளது.


கிட்டத்தட்ட 15 நாட்களாகவே தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வந்தது.. அதன்படி கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது.. அந்த வகையில், சென்னையில் கடந்த வாரத்தின் தொடக்கத்தில் தங்கம் விலை புதிய உச்சத்தை தொட்டு, சவரன் ரூ.82,000ஐ கடந்து விற்பனையானது. எனினும் பின்னர் தங்கம் விலை சற்று குறைந்தது.. வார இறுதியில் மீண்டும் தங்கம் விலை உயரத் தொடங்கியது.. இந்த சூழலில் கடந்த 2 நாட்களாக தங்கம் விலை தாறுமாறாக உயர்ந்தது.. நேற்று காலை ரூ. 560 உயர்ந்த தங்கம் விலை மாலை ரூ.1,120 உயர்ந்தது..

இந்த நிலையில் இன்று சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சற்று குறைந்துள்ளது.. அதன்படி ஒரு கிராமுக்கு ரூ.40 குறைந்து ரூ.10,600க்கு விற்பனையானது.. இதனால் ஒரு சவரனுக்கு ரூ. 320 குறைந்து ரூ. 81800க்கு விற்பனை செய்யப்படுகிறது.. தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து புதிய உச்சத்தை தொட்டு வந்த நிலையில் இன்று சற்று குறைந்துள்ளதால் நகைப்பிரியர்கள் நிம்மதி அடைந்துள்ளனர்..

ஆனால் இன்று மாலை வெள்ளி விலையும் உயர்ந்துள்ளது.  ஒரு கிராம் வெள்ளி ரூ. 1 உயர்ந்து ரூ.150க்கு விற்பனை செய்யப்படுகிறது.. இதனால் ஒரு கிலோ ரூ.1,50,000 விற்பனையாகிறது.

Read More : குட்நியூஸ்!. ரூ.1 கோடி பரிசுத் தொகை!. 12 கோடி மாணவர்களுக்கு வாய்ப்பு!. விக்ஸித் பாரத் பில்டத்தான் திட்டம் பற்றி தெரியுமா?.

English Summary

Gold prices in Chennai, which had been rising for the past 2 days, have decreased slightly today.

RUPA

Next Post

திடீரென முடங்கிய ChatGPT.. உலகம் முழுவதும் பயனர்கள் அவதி..! என்ன காரணம்..?

Wed Sep 24 , 2025
ChatGPT suddenly stopped working.. Users all over the world are suffering..! What is the reason..?
Chatgpt

You May Like