புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே கோனாபட்டு கிராமத்தில், ‘உங்களுடன் ஸ்டாலின்’ என்ற குறைகேட்பு முகாம் நடைபெற்றது. இந்த முகாமை தொடங்கி வைத்த அமைச்சர் ரகுபதி, பொதுமக்கள் அளித்த மனுக்களுக்கு உடனடியாக தீர்வு கண்டு, அதற்கான ஆணைகளை மக்களிடமே நேரடியாக வழங்கினார்.
அப்போது பேசிய அமைச்சர், ’உங்களுடன் ஸ்டாலின்’ என்பது மக்களுக்காகவே உருவாக்கப்பட்ட ஒரு திட்டம். பொதுமக்கள் தங்கள் குறைகளுக்காக பல அலுவலகங்களுக்கு செல்ல வேண்டிய நிலை இனி இருக்காது. ஒரே இடத்தில் அனைத்துத் துறைகளையும் ஒருங்கிணைத்து, மக்களின் குறைகளை கேட்டு, அன்றைய தினமே அல்லது அதிகபட்சமாக 45 நாட்களுக்குள் தீர்வு கிடைக்க வேண்டும் என்பதே இத்திட்டத்தின் நோக்கம்” என்று கூறினார்.
சமீபத்தில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் சென்னையில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்தின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு நடத்தினர். இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கைகள், மக்களிடமிருந்து வரும் வரவேற்பு மற்றும் எதிர்காலத்தில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்தும் அவர்கள் அதிகாரிகளிடம் கேட்டறிந்தனர்.
விரைவில் மகளிர் உரிமைத் தொகை :
இந்த ஆய்வின்போது, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மகளிர் உரிமை தொகை திட்டத்திற்கான மனுக்களின் தற்போதைய நிலவரம் குறித்துக் கேட்டறிந்தார். அதைத் தொடர்ந்து பேசிய துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், கலைஞர் மகளிர் உரிமைத் தொகை விரைவில் வழங்கப்படும் என தெரிவித்தார்.
Read More : செல்வத்தை அதிகரிக்கும் குபேரர் சிலை..!! உங்கள் வீட்டில் எங்கு வைத்தால் அதிர்ஷ்டம் வரும்..?