தனது தனித்துவமான உடல்மொழி மற்றும் இயல்பான நகைச்சுவையால் தமிழ் சினிமா ரசிகர்களை சிரிக்க வைத்த நடிகர் ரோபோ சங்கர். சென்னை, துரைப்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், 46 வயதிலேயே உயிரிழந்தது திரையுலகினர் மற்றும் ரசிகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. சமீபத்தில் ஒரு படப்பிடிப்பில் இருந்தபோது ரோபோ சங்கர் திடீரென மயங்கி விழுந்தார்.
நீர்ச்சத்து குறைபாடு மற்றும் குறைந்த ரத்த அழுத்தம் காரணமாக இந்த மயக்கம் ஏற்பட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த அவருக்குப் புதன்கிழமை மாலை திடீரென உடல்நிலை மோசமானது. கல்லீரல் மற்றும் சிறுநீரக செயலிழப்பு காரணமாக, தீவிர சிகிச்சைப் பிரிவில் வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டபோதிலும், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். அவருக்கு ஏற்கனவே மஞ்சள் காமாலை இருந்தது.
இந்த சூழலில் தான், நடிகர் ரோபோ சங்கரின் மரணம் குறித்து தற்போது ஒரு புதிய தகவல் வெளிவந்துள்ளது. அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர் சாந்தி கூறுகையில், ரோபோ சங்கருக்கு மஞ்சள் காமாலை மட்டுமின்றி வயிறு வீக்கம், மண்ணீரல் வீக்கம், கால் வீக்கம் போன்ற பிரச்சனைகளும் இருந்தன. இதையடுத்து, அவருக்கு நாட்டு மருந்து சிகிச்சை அளிக்கப்பட்டது. அவருக்கு கல்லீரல் முழுவதும் அழுகிவிட்டது. இதுதான் ரோபோ சங்கரின் மரணத்திற்கு முக்கிய காரணம் என்று மருத்துவர் சாந்தி தெரிவித்துள்ளார்.
Read More : நடைபயிற்சி செல்லும் முன் என்ன சாப்பிடலாம்..? டைமிங் ரொம்ப முக்கியம்..!! இப்படி நடந்தால் ஆயுள் கூடும்..!!



