பண்டிகை காலங்கள் என்றாலே பலரும் தங்களது வீட்டில் தலைக்கு குளிப்பார்கள். ஆனால், சிலருக்கு தலைக்கு குளித்தவுடன் தலைவலி ஏற்படும். குளிர்ச்சியான நீரில் குளித்தாலும் அல்லது வெந்நீரில் குளித்தாலும் இந்த தலைவலி வரலாம். இது உடலில் ஏற்படும் வெப்பநிலை மாற்றத்தால் நிகழ்கிறது. குறிப்பாக, தலை மற்றும் மூளையை சுற்றியுள்ள சைனஸ் பகுதியில் வெப்பநிலை குறைவதால் தலைவலி ஏற்படுகிறது.
ஈரமான கூந்தல் : பலர் தலையை சரியாக துடைக்காமல் ஈரப்பதத்துடன் வெளியே செல்கின்றனர். இதுவும் சைனஸ் பகுதியில் வெப்பநிலை குறைந்து தலைவலி ஏற்பட முக்கிய காரணமாகும்.
அதிகமான குளியல் : சிலர் அருவிகள், கடல்கள் போன்ற இடங்களில் குளிக்கும்போது, நீர் தலையில் நேரடியாக படுவதால் தலைவலி ஏற்படலாம்.
ஹேர் மாஸ்க் : முதல் நாள் இரவே எண்ணெய் தடவி, ஹேர் மாஸ்க் போட்டுவிட்டு, அடுத்த நாள் குளிப்பவர்களுக்கும் தலைவலி வர வாய்ப்புள்ளது.
தலைவலியை தடுக்கும் வழிகள் :
வெதுவெதுப்பான நீர் : எப்போதும் வெதுவெதுப்பான நீரில் குளிப்பது உடலின் வெப்பநிலையை சீராக வைத்திருக்க உதவும். மிக குளிர்ந்த நீர் உடலின் வெப்பநிலையை குறைத்துவிடும். அதேபோல், மிக சூடான நீர் சருமத்தையும், முடி வேர்களையும் பலவீனப்படுத்தும்.
கூந்தலை உலர்த்துதல் : குளித்து முடித்தவுடன் தலைமுடியை சரியாக உலர்த்துவது மிக முக்கியம்.
குறுகிய நேரம் : எண்ணெய் தேய்த்து குளிக்கும்போது, நீண்ட நேரம் தலையில் எண்ணெய் ஊற வைக்காமல், ஓரிரு மணிநேரத்திற்குள் குளிப்பது நல்லது.
Read More : பாத்ரூமில் திடீர் மாரடைப்பு வர என்ன காரணம்..? எச்சரிக்கும் இதயநோய் நிபுணர்..!! இதை ஃபாலோ பண்ணுங்க..!!



