பொதுத்துறை வங்கியில் வேலை.. ரூ.93,960 வரை சம்பளம்.. உடனே அப்ளை பண்ணுங்க..!

bank job

பொதுத்துறை வங்கியான பஞ்சாப் & சிந்து வங்கி தற்போது Regular Basis அடிப்படையில் சிறப்பு அதிகாரிகள் பிரிவில் காலியாக உள்ள 190 பணியிடங்களுக்கு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.


பணியின் விவரங்கள்:

Credit Manager பதவி: 130 பணியிடங்கள்

Agriculture Manager பதவி: 60 பணியிடங்கள்

வயது வரம்பு: விண்ணப்பதார்களின் குறைந்தபட்ச வயது 23 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதிகபடியாக விண்ணப்பதார்களின் வயது வரம்பு 35 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அரசு விதிகளின்படி தளர்வுகள் உண்டு.

கல்வித்தகுதி:

* கிரெட்டிட் மேனேஜர்: பட்டப்படிப்பை 60 சதவீத மதிப்பெண்களுடன் முடித்திருக்க வேண்டும் அல்லது CA/CMA/CFA/MBA ஆகியவற்றை படித்தவர்களும் விண்ணப்பிக்கலாம். குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் அனுபவம் தேவை.*

* வேளாண் மேனேஜர் பதவி: வேளாண் சார்ந்த படிப்புகளாக விவசாயம், தோட்டக்கலை, டையிரி, கால்நடை அறிவியல், வேளாண் பொறியியல் ஆகியவற்றில் இளநிலை பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். மேலும் 3 ஆண்டுகள் பணி அனுபவம் எதிர்பார்க்கப்படுகிறது. பட்டப்படிப்பில் 60 சதவீத மதிப்பெண்கள் தேவை.

* எஸ்டி, எஸ்சி, ஒபிசி, மாற்றுத்திறனாளிகளுக்கு 55 சதவீதம் தளர்வு உள்ளது.

சம்பளம்: பஞ்சாப் மற்றும் சிந்து வங்கியில் உள்ள மேனேஜர் காலிப்பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு மாதம் ரூ.64,820 முதல் ரூ.93,960 வரை சம்பளம் வழங்கப்படும். சம்பளத்துடன் கொடுப்பனை மற்றும் அகவிலைப்படி உண்டு.

தேர்வு செய்யப்படும் முறை: இந்த 190 காலிப்பணியிடங்களுக்கு முக்கியமாக மூன்று கட்டங்களில் தேர்வு செய்யப்படுவர்.

எழுத்துத் தேர்வு (Written Test):

  • பாடங்கள்: ஆங்கிலம், பொது அறிவு, பணிக்கான திறன்
  • கேள்விகள்: 100 கேள்விகள்

தேர்ச்சி பெற வேண்டிய மதிப்பெண்:

  • பொதுப்பிரிவு: 40%
  • பிற பிரிவுகள்: 35%

நேர்காணல் (Interview): எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே நேர்காணலுக்கு அழைக்கப்படுவர்.

இறுதி தேர்வு (Final Selection): எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணலில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் இறுதி பட்டியல் வெளியிடப்படும்.

எப்படி விண்ணப்பிப்பது? வங்கியின் https://punjabandsind.bank.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்க வேண்டும். இதற்கு கட்டணமாக ரூ.850 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.100 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்க கடைசி நாள் 10.10.2025.

Read more: ஜாக்பாட்..!! அரசு ஊழியர்களுக்கு கொட்டப் போகும் தீபாவளி போனஸ்..!! வெளியான செம அறிவிப்பு..!!

English Summary

Job in a public sector bank.. Salary up to Rs.93,960.. Apply immediately..!

Next Post

21 நாட்களுக்கு இதை தவறாமல் செய்யுங்கள்; உங்கள் பானை வயிறு தட்டையாக மாறும்!

Thu Sep 25 , 2025
அதிக எடை காரணமாக பலர் உடல்நலப் பிரச்சினைகளை எதிர்கொள்கின்றனர். தவறான வாழ்க்கை முறை மற்றும் உணவு முறை காரணமாக இந்த உடல் பருமன் பிரச்சினை அதிகரித்து வருகிறது. மேலும், உடல் பருமன் அதிகரித்தவுடன், அதை இழப்பது மிகவும் கடினம். எனவே, பெரும்பாலான மக்கள் எடை குறைக்க பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். மேற்பரப்பில் எடை இழப்பது எளிதாகத் தோன்றினாலும், பலருக்கு இது ஒரு சாகசமாகத் தெரிகிறது. சிலர் ஜிம், யோகா, […]
belly fat

You May Like