fbpx

இனி DD பொதிகை அல்ல..!! ஜனவரி முதல் அதிரடி மாற்றம்..!! களத்தில் செய்தியாளர்கள்..!! மத்திய அமைச்சர் அறிவிப்பு..!!

மத்திய தகவல் தொடர்பு துறை இணையமைச்சர் எல்.முருகன், இன்று சென்னை சேப்பாக்கத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், ”முன்பு அனைவரும் DD பொதிகை தொலைக்காட்சியில் ஒளியும் ஒலியும் பார்த்துக்கொண்டு இருந்தோம். தற்போது மீண்டும் DD பொதிகை தொலைக்காட்சியில் சினிமா நிகழ்ச்சிகளை ஒளிபரப்ப உள்ளோம். ஜனவரி 14ஆம் தேதி முதல் DD பொதிகையானது DD தமிழ் என பெயர் மாற்ற நடவடிக்கை எடுத்துள்ளோம்.

அதே போல, எங்கள் DD நிருபர்கள் அடுத்ததாக களத்தில் இறங்கி செய்தி சேகரிக்க உள்ளனர். இனி அவர்களும், முதல்வர் முதல் அனைவரிடத்திலும் கேள்வி கேட்பர். இதற்காக வெளியில் இருந்து தற்போது ஆட்களிடம் பேசி வருகிறோம். விரைவில் நிரந்தரமாக ஆட்களை நியமிப்போம். குறிப்பிட்டது போல இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை அதிகரிப்போம் என்று கூறினார்.

அடுத்து தமிழக மீனவர்கள், தொடர்ந்து இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்படுவது குறித்து கேட்கையில், இது நமது நாடு மட்டும் தொடர்புடைய பிரச்சனை அல்ல. இது இரு நாட்டு தலைவர்கள் இடையே பேச்சுவார்த்தை நடத்த வேண்டியுள்ளது என மத்திய இணையமைச்சர் எல்.முருகன் குறிப்பிட்டார்.

Chella

Next Post

’இனி மதிய உணவில் முட்டை பிரியாணி’..!! மாணவர்கள் குஷி..!! அரசு வெளியிட்ட அறிவிப்பு..!!

Fri Nov 10 , 2023
மதிய உணவோடு, காலை சிற்றுண்டியும் தமிழ்நாட்டில் வழங்கப்பட்டு வருகிறது. இந்த முன்னோடி திட்டத்தை இதர மாநிலங்களும் பின்பற்றத் தொடங்கியுள்ளன. அந்த வரிசையில், மகாராஷ்டிரா மாநிலத்தில் மதிய உணவுடன் முட்டை அல்லது வாழைப்பழம் சேர்த்து வழங்கப்பட்டன. இதன் அடுத்தக்கட்டமாக வாரத்தின் குறிப்பிட்ட தினங்களில் முட்டை பிரியாணியாக வழங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, புதன் மற்றும் வெள்ளி என இரு நாட்களுக்கு மதிய உணவாக முட்டை பிரியாணியும், முட்டை பிரியாணிக்கு பதில், வழக்கமான […]

You May Like