விஜய்யை பார்க்க வரும் பெண்களை இழிவுப்படுத்தி பேசியதாக சாட்டை துரைமுருகன் மீது தவெக தரப்பில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.
தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் தனது தேர்தல் பிரச்சார சுற்றுப்பயணத்தை கடந்த 13-ம் தேதி திருச்சியில் இருந்து தொடங்கினார்.. திருச்சியில் விஜய்யை பார்க்க ஏராளமான இளைஞர்களும், பெண்களும் குவிந்தனர்.. மேலும் திருச்சி கூட்டத்தில் விஜய்யை பார்த்துவிட்டதாக பல பெண்கள் வீடியோ பதிவிட்டு வந்தனர்.
பிரபல யூடியூபரும் நாம் தமிழர் கட்சி நிர்வாகியுமான சாட்டை துரைமுருகன் விஜய்யை பார்க்க வரும் பெண்களை இழிவுப்படுத்தும் வகையில் பேசியதாக குற்றச்சாட்டு எழுந்தது.. இதுகுறித்து வீடியோவில் பேசிய சாட்டை துரை முருகன் “ விஜய்யை பார்த்துவிட்டேன் என்று ஒருத்தி அழுகிறாள்.. விஜய்யை பார்க்க முடியவில்லை என ஒருத்தி அழுகிறாள்.. இன்னொருத்தி என் ஃபோனை காணவில்லை என்று அழுகிறாள்.. இதைப்பற்றி நாம் கேள்விக் கேட்கிறோமே ஒழிய தனிப்பட்ட முறையில் விஜய்யை திட்ட வேண்டும் ஆபாசமாக பேச வேண்டும் என்று பேசுவதில்லை.
ஆனால் விஜய்யின் ரசிகர்கள் கூட்டம், இந்த முட்டாள் கூட்டம்.. தற்குறி கூட்டம்.. நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வந்தான் என்றால் அவனை சம்பவம் பண்ணிடுவோம்.. அவன் செத்திடுவான் என்று பேசுகின்றனர்..” என்று பேசியிருந்தார்..
இந்த நிலையில் விஜய்யை பார்க்க வரும் பெண்களை இழிவுப்படுத்தி பேசியதாக சாட்டை துரைமுருகன் மீது தவெக தரப்பில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது. தேசிய மகளிர் ஆணையத்தில் திருச்சி தவெக சார்பில் ஆன்லைன் வாயிலாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்த புகாரின் அடிப்படையில் சாட்டை துரைமுருகனிடம் விரைவில் விரைவில் விசாரணை நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது..
Read More : விஜய்க்கு போட்டியா கட்சி தொடங்கிய பிக்பாஸ் பிரபலம்..? இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே..!