எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் தற்போதைய கதைக்களத்தை பொறுத்தவரை தர்ஷனுக்கு அன்புக்கரசி உடன் திருமணம் செய்து வைக்க ஆதி குணசேகரனும், தர்ஷனை அவரது காதலி பார்கவி உடன் சேர்த்து வைக்க ஜீவானந்தம் மற்றும் ஜனனியும் போராடி வருகிறார்கள். தர்ஷனுக்கு ஈஸ்வரி ஆசைப்பட்டது போல் எப்படியாவது பார்கவியுடன் திருமணம் நடத்தி வைக்க வேண்டும் என ஜனனி, நந்தினி, ரேணுகா போராடுகிறார்கள்.
அறிவுக்கரசி தனது தங்கையுடன் தான் திருமணம் நடக்க வேண்டும் என அவர் ஒரு பிளான் போடுகிறார். குணசேகரன் ஈஸ்வரியை தாக்கும் வீடியோவை வைத்து ஒரு நபர் அறிவுக்கரசியிடம் டீல் பேசுகிறார், அவரும் எதுவும் செய்ய முடியாமல் பணத்தை ஏற்பாடு செய்கிறார். முல்லை வேந்தன் நந்தினியை பார்த்து காதல் ததும்ப சக்தியிடம் பேச பளார் என ஒரு அறை விடுகிறார்.
இதற்கிடையே காலையில் முகூர்த்த நேரம் 4 மணிக்கு என சொல்கிறார் குணசேகரன். இதைக்கேட்டு அனைவரும் ஷாக் ஆகிறார்கள். சக்தி, ரேணுகா மற்றும் நந்தினியும் இந்த ட்விஸ்டை எதிர்பார்க்காததால், தர்ஷனை எப்படி வெளியே அழைத்துச் செல்வது என பிளான் போடுகிறார்கள். 4 மணிக்குள் பார்கவியை ஜனனி அழைத்து வருவது முடியாத காரியம் என்பதால், தர்ஷனை மண்டபத்தில் இருந்து வெளியே அழைத்துச் செல்வதே ஒரே வழி.
இதனால் அவரை எப்படி வெளியே அழைத்து செல்லப் போகிறார்கள் என்பது தான் கேள்வியாக உள்ளது. இந்த சிக்கல்களுக்கு இடையே தர்ஷனுக்கு பார்கவியுடன் திருமணம் நடைபெறுமா என்பதை பொறுத்திருந்தே பார்க்கலாம்.