இளமை திரும்பிய சித்தர்கள்.. கஞ்சமலை சித்தேசுவரர் கோவிலின் மெய்சிலிர்க்க வைக்கும் வரலாறு..!!

Siddhaswarar Temple in Kanjamalai

இளம்பிள்ளை அருகே, இயற்கை எழிலால் சூழ்ந்த மலைப்பகுதியில் அமைந்துள்ளது கஞ்சமலை சித்தேசுவரர் கோவில். மலை அடிவாரத்தில் அழகான நுழைவு வாயிலைக் கடந்து சென்றாலே, இடதுபுறத்தில் விநாயகர் அருள்பாலிக்கிறார். அவரை வணங்கி சென்றால், சித்தேசுவரரைக் காணலாம்.


புராண கதைகளின்படி, கஞ்சமலைப் பகுதியில் அநேக மூலிகைகள் வளம் பெற்றிருந்தன. இதை அறிந்த யோகி திருமூலர், வயதுமூப்பு மற்றும் மரணத்தை நீக்கும் மூலிகையைத் தேடி இங்கு வந்தார். அப்போது, அவருடன் கஞ்சமலைச் சேர்ந்த காலங்கிநாதர் என்கிற சீடரும் வந்தார்.

மூலர் தினமும் மூலிகைகளைத் தேடிச் செல்வார்; அதற்கிடையில், சீடர் காலங்கிநாதர் உணவு சமைப்பார். ஒரு நாள், கரண்டி இல்லாததால் அருகிலிருந்த செடியின் வேரை பயன்படுத்திய அவர், சமைத்த உணவு கருப்பாக மாறியதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். குருவுக்கு கொடுக்க முடியாது என்பதால் அவர் அதனைத் தானே உண்டார். அதிசயமாக, அவர் இளமை தோற்றத்துடன் மாறினார்.

பின்னர் மூலரும் அந்த வேரைத் தொட்ட நீரை குடித்து இளமையாக மாறினார். ஆனால், காலங்கிநாதரிடம், “நீ இங்கிருந்தே மக்களுக்கு சேவை செய்ய வேண்டும்” என்று உபதேசித்தார். அதன்படி, காலங்கிநாதர் அங்கு தங்கி சித்தேசுவரராக வழிபடப்பட்டு வருகிறார்.

கோயிலின் சிறப்புகள்: பக்தர்கள் தங்களது குறைகளை சித்தேசுவரரிடம் தெரிவித்தால், நியாயமான கோரிக்கை நிறைவேறும் என நம்பிக்கை உள்ளது. நோய்களை தீர்க்கும் தெய்வமாக சித்தேசுவரர் புகழ்பெற்றுள்ளார். மாதந்தோறும் அமாவாசை நாளில் சிறப்பு பூஜைகள் நடைபெறும். ஆண்டுதோறும் சித்திரை மாதம் 3-வது செவ்வாய்க்கிழமை கோவிலில் திருவிழா சிறப்பாக நடைபெறுகிறது.

கோவில் வளாகத்தில் காந்த தீர்த்தக்குளம் உள்ளது. தோல் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் உப்பு, மிளகு, வெல்லம் ஆகியவற்றைத் தலையைச் சுற்றி இந்தக் குளத்தில் விட்டால், நோய் குணமாகும் என்று பக்தர்கள் நம்புகின்றனர். மேலும், அருகே பாயும் பொன்னி ஓடையில் இருந்து வரும் நீர் இந்த தீர்த்தக்குளங்களுக்கு வருகிறது. மலைப்பகுதியில் உள்ள மூலிகைச் செடிகளின் காரணமாக, அந்த நீர் மருத்துவ குணங்களை பெற்றதாகக் கருதப்படுகிறது. அதில் குளிப்பதால் உடல் வியாதிகள் நீங்கும் என்ற நம்பிக்கையும் நிலவுகிறது.

Read more: பெண்களின் வங்கிக் கணக்கில் 10,000 ரூபாய் டெபாசிட் செய்யப்படும், பிரதமர் மோடி தொடங்கி வைத்த திட்டம்..!

English Summary

The place where the Siddhas who returned to their youth lived.. The mesmerizing history of the Siddhaswarar Temple in Kanjamalai..!!

Next Post

கடைசி வரை த்ரில்லர்!. சூப்பர் ஓவரில் இலங்கையை வீழ்த்தி இந்திய அணி அபாரம்!. பதும் நிசங்காவின் சதம் வீண்!.

Sat Sep 27 , 2025
ஆசிய கோப்பையின் சூப்பர் ஃபோர் சுற்றின் கடைசி போட்டியில் சூப்பர் ஓவரில் இந்தியா இலங்கையை வீழ்த்தியது. துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் முதலில் டாஸ் வென்ற இலங்கை அணியின் கேப்டன் சரித் அசலங்கா, முதலில் இந்திய அணியை பேட்டிங் செய்ய அழைத்தார். பதிலுக்கு இந்திய அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 202 ரன்கள் எடுத்தது, இது இந்த ஆசிய கோப்பை 2025 இன் அதிகபட்ச […]
india vs srilanka 1

You May Like