விஜய் சனிக்கிழமைகளில் மட்டும் மக்களை சுற்றுப்பயணம் செய்வதை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் மறைமுகமாக விமர்சித்தார்..
தவெக தலைவர் விஜய் கடந்த 13-ம் தேதி திருச்சியில் தனது தேர்தல் சுற்றுப்பயணத்தை தொடங்கினார்.. எனினும் வார இறுதியில் சனிக்கிழமைகளில் விஜய் பிரச்சாரம் செய்வது குறித்து பலரும் விமர்சித்து வருகின்றனர்.. ஆனால் மக்களுக்கு தொந்தரவாக இருக்கக்கூடாது என்பதற்காகவே சனிக்கிழமைகளில் மக்களை சந்திப்பதாக விஜய் விளக்கம் அளித்திருந்தார்.
இந்த நிலையில் விஜய் சனிக்கிழமைகளில் மட்டும் மக்களை சுற்றுப்பயணம் செய்வதை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் மறைமுகமாக விமர்சித்தார்.. சென்னை கிழக்கு மாவட்ட திமுக சார்பில் நடைபெற்ற முப்பெரும் விழாவில் உரையாற்றிய அவர் “தேர்தல் அறிக்கையில் சொல்லி நிறைவேற்றப்பட்ட திட்டம் தான் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம்.. 2023-ம் ஆண்டு செப்டம்பர் 15-ம் தேதி தலைவர் அமல்படுத்திய திட்டம் தான் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம். இந்த திட்டம் தொடங்கப்பட்டு 2 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது..1 கோடியே 20 லட்சம் மகளிருக்கு இதுவரை 24,000 கொடுக்கப்பட்டுள்ளது. நான் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் சுற்றுப்பயணம் செல்வேன்.
வாரத்தில் 4-5 நாட்கள் வெளியூரில் தான் இருப்பேன்.. நான் சனிக்கிழமை, சனிக்கிழமை மட்டும் வெளியே வரமாட்டேன்.. ஞாயிற்றுக்கிழமை கூட சுற்றுப்பயணத்தில் தான் இருப்பேன்.. நான் கிழமை பார்த்து வேலை செய்வதில்லை.. நான் வெளியூர்களுக்கு செல்லும் போது பலர் என்னை சந்தித்து மனு கொடுப்பார்கள்..
என்னால் செய்ய முடிந்ததை செய்து கொடுக்க ஆட்சியர்கள், அமைச்சர்களிடம் அறிவுறுத்துவேன். மாதம் ரூ.1000 பணம் மருத்துவ செலவுகளுக்கு பயன்படுவதாக 90% பேர் சொல்லுவார்கள்.. சிலர் எனக்கு வரவில்லை என்று என்னிடம் கூறுவார்கள்.. எனவே இந்த முறை கலைஞர் உரிமைத் தொகை திட்டம் அனைவரையும் சென்றடைய வேண்டும் என்பதற்காக விதிகள் தளர்த்தப்பட்டுள்ளது..” என்று தெரிவித்தார்..
Read More : ” கார் மாற்றுவதும் கால் மாற்றுவதும் எடப்பாடி பழனிசாக்கு ஒன்றும் புதிதல்ல..” உதயநிதி ஸ்டாலின் சாடல்!